குன்னூரைச் சேர்ந்த தீப்திக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலிருந்தே தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம். இதை தன்னை பெண் பார்க்க வரும் அனைவரிடம் வெளிப்படையாகவே சொல்லி விட, மாப்பிள்ளைகள் சிதறி ஒடுகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்) முழுமையான எட்டு மணிநேர தூக்கத்தை விரும்பும் செய்தி வாசிப்பாளர். ஒரு சின்ன பென்சில் சத்தம் கூட அவரை எழுப்பி விடும். இப்படியான இருவருக்கும் (குறட்டை பிரச்சினையை மறைத்து) திருமணம் நடக்க, அதே குறட்டை ஒருகட்டத்தில் கணவனிடம் இருந்து மனைவியை பிரிக்கும் அளவுக்கு கொண்டு போக… தம்பதிகளின் வாழ்க்கை என்னவானது? அந்த குறட்டை என்னவானது என்பது கூட்டு குடும்ப பின்னணியில் சொல்லப்பட்ட கதைக்களம்.


தம்பதிகளின் அன்யோன்ய அன்பை அவ்வப்போது வம்படியாக வந்து விலக்கி வேடிக்கை பார்க்கிறது, குறட்டை. சமீபத்தில் தான் ஆணின் குறட்டைக்கு ‘குட்நைட்’ சொல்லி ஒரு படம் வந்த நிலையில், இப்போது அதே குறட்டை பெண்ணுக்குள் இடம் பிடித்து வித்தை காட்டினால் என்னாகும் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

மனைவியின் குறட்டை ஒருகட்டத்தில் தன் வேலைக்கே வேட்டு வைக்கும் இடத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார், ஜி.வி.பிரகாஷ். ‘மனைவியை பிடிக்கும் . ஆனால் அவள் விடும் குறட்டை பிடிக்காது’ என்ற இருவேறு மாறுபட்ட நிலையை உடல் மொழியில் நமக்கு கடத்தி விடுகிற இடங்கள் ரசனையானவை.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கும் நிலையில் தேடி வந்த மனைவி கர்ப்பம் என்ற சொல்கிற இடத்தில் பதற்றம் பரவசம் இரண்டுக்குமான அந்த மனநிலை தேர்ந்த நடிப்பின் உச்சம்.

குறட்டை தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி விடுமோ என பயப்படும் இடங்களில் ஐஸ்வர்யா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மதுபாரில் குழப்ப மனநிலையில்இருக்கும் கணவனை வீட்டுக்கு அழைத்து வர அவர் சிரமேற்கொள்ளும் காட்சி அவரது உன்னத நடிப்புக்கு ஒரு உதாரணம்.

ஜி.வி.யின் ஸ்ட்ரிக்ட் அண்ணனாக வரும் காளி வெங்கட், குணசித்ரத்தில் டிஸ்டிங்ஷன் வாங்கிவிடுகிறார். சிடுமூஞ்சியாக ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிற இடத்தில் வெறுப்பு எற்படும் அளவுக்கு நடித்து அந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார்.

அவரது மனைவியாக வரும் நந்தினி இன்னொரு நடிப்பு ஆச்சரியம். கணவருக்கு பயப்படுகிற இடங்களில் ‘சட்சட்’டென மாறும் அவர் முகபாவங்கள் தமிழ்த்திரைக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாராக வரும் கீதா கைலாசம் அவரது தந்தையாக இளவரசு பாத்திரப்படைப்பில் பளிச்சிடுகிறார்கள்.

கணவரைப் பிரிந்து சிங்கிள் மதராக இருக்கும் ரோகிணியும், அவரை விட்டுச் சென்ற கணவராக தலைவாசல் விஜய்யும் கதையின் பிற்பகுதி ஆணி வேராகி இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையும் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் கேமராவும் படத்தை தாங்கிப் பிடிக்கும் தாங்கு தூண்கள்.
குறட்டை கதையை விழிப்புடன் தந்த விதத்தில் இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் ஜனரஞ்சக இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-11-at-17.08.31-1-1024x683.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-11-at-17.08.31-1-150x150.jpegrcinemaதிரை விமர்சனம்குன்னூரைச் சேர்ந்த தீப்திக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) சிறு வயதிலிருந்தே தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம். இதை தன்னை பெண் பார்க்க வரும் அனைவரிடம் வெளிப்படையாகவே சொல்லி விட, மாப்பிள்ளைகள் சிதறி ஒடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த அர்ஜுன் (ஜி.வி.பிரகாஷ்) முழுமையான எட்டு மணிநேர தூக்கத்தை விரும்பும் செய்தி வாசிப்பாளர். ஒரு சின்ன பென்சில் சத்தம் கூட அவரை எழுப்பி விடும். இப்படியான இருவருக்கும் (குறட்டை பிரச்சினையை மறைத்து) திருமணம் நடக்க, அதே குறட்டை...