திரை விமர்சனம்

டபுள் டக்கர் பட விமர்சனம்..

ரஜினி நடித்த ‘அதிசயப்பிறவி’ படத்தை இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனிமேஷன் செய்து படத்தை எடுத்திருக்கின்றனர்..

சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழந்து விடுகிறார் நாயகன் தீரஜ்.. அப்போது ஏற்பட்ட விபத்தில் இவரது முகம் கொடூராமாக மாறிவிடுகிறது.. இதனால் முகத்தை மறைத்துக் கொண்டே வாழ்கிறார்.

வளர்ந்த பிறகு தன் காதலை ஸ்மிருதி வெங்கட்டிடம் சொல்கிறார். ஆனால் அவர் காதலை ஏற்க மறுக்கவே மனமுடையும் தீரஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயல்கிறார்.. அப்போது ஸ்மிருதி செல்போனில் அழைக்கிறார். இதனால் மனம் மாறும் தீரஜ் தற்கொலையில் இருந்து தப்பிக்க நினைக்க அவர் உயிர் பிரிந்து விடுகிறது.

அப்போது தேவதைகளாக வரும் இரண்டு கார்ட்டூன் மரண தேதி பட்டியலை பார்க்கின்றனர்.. தீரஜ் 85 வரை வயது வரை வாழக் கூடியவர்.. அவர் மரண தேதி தவறாகிவிட்டது என்கின்றனர்.

இதனால் இனி எனக்கு உடம்பு வேண்டும் என அடம் பிடிக்கிறார் தீரஜ்.. உடலை தேடுவதற்குள் அந்த உடலை சாரா எடுத்து சென்று விடுகிறார்.. அப்போது தற்காலிகமாக ராஜா என்பவரின் உடலில் தீரேஜை உள்ளே நுழைய செல்கின்றனர்.

ஆனால் ராஜாவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதை அறிகின்றனர். அதன் பின்னர் என்ன நடந்தது.? தீரஜ் முழுமையாக உயிர் பெற்று வந்தாரா? ராஜா யார்? அவரது பின்னணி என்ன? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக தீரஜ் நாயகியாக ஸ்மிருதி வெங்கட், போலீஸ் இன்ஸ்பெக்டராக கோவை சரளா, கேங்ஸ்டர் ஆக மன்சூர் அலிகான், ரவுடியாக சுனில் & ஷாரா, பைத்தியமாக எம் எஸ் பாஸ்கர் ஆகியோர்.

அரவிந்த் & ராஜா என்ற இரு கேரக்டர்களில் நாயகன் தீரஜ்.. இரண்டு கேரக்டரிலும் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. காமெடி ரொமான்ஸ் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.. நாயகி ஸ்மிருதி வெங்கட் அழகாக வந்து கண்களாலும் பேசி கவர்ந்து செல்கிறார்..

சுனில் மற்றும் சாரா தனி டிராக்கில் காமெடி செய்திருக்கின்றார்கள். இவர்கள் காட்சி பெரிதாக படத்துடன் ஒட்டவில்லை..

வழக்கம்போல கோவை சரளா காமெடியில் பின்னி எடுத்து இருக்கிறார்.. அதே சமயம் சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் ஓவர் வாய்ஸ் கொடுப்பதை தவிர்த்து இருக்கலாம்.

வில்லன் மன்சூர் அலிகானுக்கு ஓவர் பில்டப் கொடுத்து இன்ட்ரோ கொடுத்து இருக்கிறார்கள்.. அவரும் கொடுத்த பாத்திரத்தில் நிறைவு..

கார்ட்டூன் தேவதைகளாக முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட்.. இருவரது குரல்களும் டைமிங் காமெடிகளும் படத்திற்கு கூடுதல் பலம்..

ஹைடெக் திருடர்களாக கருணாகரன் & யாஷிகா ஆனந்த் நடித்துள்ளனர். இவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் யாஷிகாவின் கேரக்டர் படத்தில் ஒரு திருப்புமுனையை உண்டாக்குகிறது..

மீரா மஹதி என்பவர் இயக்கியிருக்கிறார்.

கினி கினி கின்கினி… என்ற பாடல் குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக அமையும்.. அதுபோல டாலுமா டாலுமா மை டியர் டாலுமா என்ற பாடல் காதலர்களுக்கு பிடித்த பாடலாக அமையும்.. இனிமேல் இசை அமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்களை மீண்டும் கேட்க வாய்ப்பு..

கலை இயக்குனர் : சுப்ரமணிய சுரேஷ்

ஒளிப்பதிவாளர் : கௌதம் ராஜேந்திரன்

படத்தொகுப்பாளர் : வெற்றிவேல்

ஒளிப்பதிவு கலை இவர்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனரின் பணி படத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது ஆனால் இடைத்தேர்தல் தான் கொஞ்சம் நம் பொறுமையை சோதித்து விட்டார்.

ஒரு காட்சி தொடங்கி தொடர்வதற்குள் நாம் அதற்குள் கனெக்ட் ஆவதற்குள் அடுத்த காட்சியை காட்டி விடுகிறார்.. இதுபோல தொடர்ந்து பல காட்சிகள் ஒன்று பின் ஒன்றாக மாற்றி மாற்றி காட்டும் போது நம்மால் ஒன்ற முடியவில்லை..

படத்தில் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்திருக்கிறது.. ரைட் லெப்ட் என்ற தேவதைகளாக முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் நடித்துள்ளனர்.. பெரும்பாலும் இவர்களின் குரல் மட்டுமே ஒலிக்கிறது.. கிளைமாக்ஸ் காட்சியில் இவர்களுக்கு உருவம் கிடைக்கிறது.. அதுபோல இடை இடையே கபாலி ரஜினி, விக்ரம் கமல், ரோலக்ஸ் சூர்யா உள்ளிட்டோரும் வந்து செல்கின்றனர்.

இன்னுமாடா இந்த படத்துல லாஜிக் எல்லாம் பாக்குறீங்க என்று ஒரு டயலாக் இடம் பெறுகிறது.. எனவே எந்த லாஜிக்கும் பார்க்காமல் குழந்தைகளுடன் இந்த படத்தை சென்று ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் மீரா மஹதி..

கிட்டத்தட்ட 4-5 கதைகளை இணைத்து முடிச்சு போட முயன்றிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் காட்டிய கவனத்தை கொஞ்சம் படத்தொகுப்பில் காட்டி இருந்தால் குழப்பம் இல்லாமல் அமைந்திருக்கும்.. பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது ரசிக்க வைக்கிறது.. அனிமேஷன் பாம்பு அதன் மேல் முதலாளி கார்ட்டூன் குழந்தைகளை கவரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *