ஒயிட் ரோஸ் விமர்சனம்

கயல் ஆனந்தின் கணவர் விஜித்.. இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் இவர்களுக்கு தியா என்ற ஒரு மகள்..
ஆனந்தியின் பிறந்தநாள் அன்று இந்தியாவுக்கு வரும் விஜித் மனைவி மகளை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்று விருந்து கொடுத்து அழைத்து வருகிறார்.
அந்த இரவு நேரத்தில் போலீஸ் ஒரு ரவுடியை என்கவுண்டர் செய்யும் போது தவறுதலாக அந்த குண்டு விஜித் மேல் பாய்ந்து விடுகிறது.. சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விடுகிறார்.
கணவனை இழந்த ஆனந்தி கஷ்டப்படுகிறார்.. வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கிறார். காதலித்து திருமணம் செய்ததால் அப்பாவும் வீட்டில் உள்ளே விட மறுக்கிறார்..
இந்த சூழ்நிலையில் கடனை கொடுத்த நபர் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று விடுகிறார். பணத்தை கொடுத்து விட்டு குழந்தையை பெற்றுக்கொள் என மிரட்டி விட்டு செல்கிறார்.
இந்த கட்டத்தில் ஆனந்தியின் பக்கத்து வீட்டு தோழி ஒரு ஆலோசனை சொல்கிறார் நான் ஒரு கால் கேர்ள்.. உனக்கு விருப்பம் இருந்தால் நீயும் செல்.. உடனடியாக உனக்கு பணம் கிடைக்கும்.. கடனை அடைத்து குழந்தையை மீட்டு வா என்கிறார்.
அதன்படி புரோக்கர் மூலம் ஆனந்தியும் இந்தத் தொழிலுக்கு வருகிறார்.. முதல் நாள் ஆர்கே சுரேஷின் விருப்பத்திற்கு இணங்க அவருடன் படுக்கையறைக்கு செல்கிறார்.
அதற்கு முன் பாத்ரூமில் குளித்துவிட்டு வருகிறேன் என்று ஆனந்தி உள்ளே செல்லும் போது அங்கே ஒரு இளம் பெண்ணின் வெட்டப்பட்ட கைவிரல் ஒன்று கிடப்பதை பார்க்கிறார்..
எனவே சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.? ஆனந்தி அங்கிருந்து தப்பித்தாரா? போலீஸ் வந்து காப்பாற்றினார்களா? ஆர் கே சுரேஷ் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
1. KAYAL ANANDHI as DIVYA
2. RK SURESH as DILIP
3. ROOSO SREEDHARAN as ACP VETRIMARAN
4. VIJITH as ASRAF
5. BABY NAKSHATRA as DIYA
6. SASI LAYA as INSPECTOR REKHA
7. SULIYAN BHARANI as YOUNG DILIP
8. RITTIKA CHAKRABORTHY as SWATHI
9. HASHIN as DOCTOR ANJALI
10. DHARANI REDDY as KAVYA
பாசம் பயம் பதட்டம் என அனைத்து எமோஷ்னல்களையும் அழகாக கொடுத்து படத்தை தாங்கி நிற்கிறார் ஆனந்தி.. கணவன் இல்லாத சூழ்நிலை.. குழந்தையை காப்பாற்ற வேறு வழியின்றி அவர் விபச்சார தொழிலுக்கு செல்லும் அந்த பரிதவிப்பு காட்சியில் உணவு பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மிரட்டல் வில்லனாக ஆர்கே சுரேஷ்.. படத்தில் நான்கைந்து வசனங்கள் மட்டுமே பேசி இருப்பார்.. சைக்கோ வில்லனாக மிரட்டி இருக்கிறார்.
ஆர்.கே.சுரேஷின் இளவயது மருத்துவ கல்லூரி மாணவனாக வரும் சுலியன் பரணி நல்ல ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இளவயது வில்லனாக நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வரும்.
தியாவாக நடித்திருக்கும் பேபி நட்சத்திரா செம க்யூட்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக சசி லயா.. சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இவருடன் மற்றொரு நேர்மையான போலீஸ் ஆக ரூசோ ஸ்ரீதரன்.. தான் செய்த தவறான என்கவுண்டர்ருகாக இவர் எடுக்கும் நடவடிக்கைகள் போலீஸ் மீதான மதிப்பை அதிகரிக்கிறது..
11. Writer – Director: K RAJASHEKAR
12. Producer: N RANJANI
13. Cinematographer: V ELAYARAJA
14. Music: SUDHARSHAN
15. Editor: GOPIKRISHNA
16. Lyrics: Kaviperarasu Vairamuthu
17. Art: TN Kabilan
ஒரு த்ரில்லர் பாணியிலான கதையை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்.
வைரமுத்து எழுதிய இரண்டு பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது.. ஆனால் படமாக்கிய விதத்தில் இன்னும் கூடுதல் மெனக்கட்டு இருக்கலாம்..
சுதர்ஷன் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.. ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்பை உண்டாக்குகிறது..
ஆர்கே சுரேஷ் யார்? அவரது பின்னணி என்ன ஆகிய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.
