ஒரு தவறு செய்தால் – விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் ஆர் கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது பணமழை பொழிந்தது.. அதைக் கதைகளாக வைத்து கே கே நகரில் தேர்தல் என்ற பெயரில் ஒரு கதைக்களம் செய்திருக்கின்றனர் இந்த படக் குழுவினர்.
உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் உள்ளிட்டவர்கள் நண்பர்கள்.. சினிமாவில் உதவி இயக்குனர் டெக்னாலஜியில் நல்ல அறிவு என பல திறமைகள் இருந்தாலும் இவர்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர்.. வாடகை வீடு கூட கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் ஏதாவது செய்து பெரிய அளவில் முன்னேற திட்டம் போடுகின்றனர்..
இந்த சூழ்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் உள்ள நிலையில் நண்பர்கள் ஒரு திட்டம் போடுகின்றனர்.
அதன்படி ஒரு வேட்பாளரின் பர்சனல் வீடியோ ஒன்றை எடுத்து அதை வேறொரு பெண்ணுடன் இணைத்து இருவருக்கும் தகாத உறவு இருந்ததாக ஒரு வீடியோவை பதிவிடுகின்றனர். அந்த வீடியோவை மற்றொரு கட்சி வேட்பாளர் நமோ நாராயணனுக்கு விற்க முயல்கின்றனர்.
வீடியோவை பார்த்த நமோ நாராயணன் மற்றும் அவரது உதவியாளர் எம் எஸ் பாஸ்கர் இருவரும் 17 கோடி தர சம்பாதிக்கின்றனர்.. அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகிவிட்ட நிலையில் திடீரென பணம் தர மறுக்கின்றனர்.
நீ என்ன வேணாலும் செய்து கொள்.. பணம் தர முடியாது என்று மிரட்டுகின்றனர்.. அதன் பிறகு நண்பர்கள் என்ன செய்தனர் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
MS bhaskar as parmaeshwaran
Ramchandran as ram
Upasana rc as munishwari
Paari as paari
Srithar as srithar
Namo narayan as ulaganathan
Surendhar as sura
Santhosh as Santhosh
உபசனா ஸ்ரீதர் பாரி சுரேந்தர் சந்தோஷ் இவர்கள் அனைவரும் கொடுத்த பாத்திரத்தை கலகலப்பாக கொண்டு சென்று நிறைவு செய்து இருக்கின்றனர். சின்ன சின்ன வசனங்கள் மூலம் அனைவரும் நம்மை கவர்கின்றனர். அதிலும் தலைமுடி அதிகம் வைத்திருக்கும் நபர் லூசு போல அங்கும் இங்கும் அலையவிட்டு காட்சிகளை சுவாரசியப்படுத்தி இருக்கின்றனர்.
பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்தாலும் இறுதியில் இவர்கள் செய்யும் ஒரு நிகழ்வு நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம்.
நமோ நாராயணன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் இருவரும் ஒரு அரசியல்வாதிக்கு உரித்தான குணங்களை அப்படியே பிரதிபலிக்கின்றனர்..
Director – Mani dhamodharan
D. O. P – Vijay krishna and mahesh sridhar as
Editor – Vithu jeeva
Music Director – K.m rayan
Production Banner – KMP Pictures
PRO – Nikil Murukan
ராயனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.. ஒரு பாடல் இடம்பெற வேண்டிய இடத்தில் வெறும் கவிதைகளை மட்டுமே கொண்டு அந்த இடத்தை அழகாக நிறைவு செய்து இருக்கின்றனர்.. அதற்கு டி.ஆர். பின்னணி குரல் அழகாக பொருந்தி இருக்கிறது..
கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படத்தையும் ஒரே லாட்ஜ் அறைக்குள் வைத்து படத்தை நகர்த்தி இருப்பது படத்தின் கதை மீது இயக்குனர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.
மணி தாமோதரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகளும் பணத்தை விற்கும் வாக்காளர்களும் ஒரே மாதிரியானவர்களே.. இருவரும் திருந்த வேண்டும் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறார்.
தன்னையும் தன் பிள்ளைகளை நம்பாதவன் மட்டுமே ஓட்டை விற்பான் என்ற வசனம் செம.
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.. ஒரு தவறு செய்தால் என்ற தலைப்பும் இந்த படத்திற்கு பொருந்தி போவது அழகு..
