யோகி பாபுவின் தந்தை ஒரு சயின்டிஸ்ட்.. அவர் ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டது போலவே யோகிபாபுவும் ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரத்து பெறப் முயற்சிக்கிறார்.. அதன்படி யோகிபாபுவின் பூர்வீக அரண்மனையில் சில தினங்கள் தங்கி வசிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.

எனவே அதன்படி அந்த பூர்வீக அரண்மனைக்கு செல்கின்றனர்.. இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும் வருகின்றனர்..

மேலும் யோகி பாபுவால் பாதிக்கப்பட்ட சேஷு, தங்கதுரை, ரோபோ சங்கர், கே பி ஒய் பாலா ஆகியோரும் அங்கு வருகின்றனர். அவர்கள் யோகி பாபுவை பழிவாங்க திட்டமிடுகின்றனர்

இந்த சூழ்நிலையில் திடீரென நடிகை ஓவியாவும் வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான் யோகிபாபுவின் மனைவி ஒரு வெளிநாட்டு உளவாளி என்றும் அவர் ஒரு சதி திட்டத்திற்காக அங்கு உள்ளே வந்திருக்கிறார் எனும் தெரிய வருகிறது.

அப்படி என்றால் அவரது பின்னணி என்ன.? யோகி பாபு உடன் சென்ற இருவர்கள் யார்? நோக்கம் என்ன? யோகி பாபு திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

வழக்கம்போல காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார் யோகி பாபு கவுண்டமணி பாணியில் உருவ கேலி செய்து மற்றவரை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஓவியா நடிகை ஓவியாவை வந்து செல்கிறார்.. ஒரு பாடலுக்கும் ஒண்டெர் உமனாக வந்து சாகசங்கள் செய்கிறார். அது எல்லாம் ஏன்? எதற்கு தெரியவில்லை.

சேசு, தங்கதுரை, பாலா ஆகியோர் படம் முழுவதும் வருகிறார்கள் பட முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார்கள் இதனால் தியேட்டரை விட்டு வெளியே ஓடி விடலாமா? என தோன்றுகிறது.. ஸ்பைடர் மேன் ஹல்க் போன்ற உடைகளை போட்டு ஏதேதோ செய்கின்றனர்.

இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர் ரோபோ சங்கர் சோனா மதன்பாபு ஆகியாரும் உண்டு.. இவர்களுக்கு வேலை இல்லை.

எந்த லாஜிக்கும் பார்க்க வேண்டாம்.. நாங்கள் எல்லாம் காமெடி நடிகர்கள் ஏதேதோ செய்வோம் நீங்கள் சிரித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் நடித்துள்ளனர்.. சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளனர்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் இந்த பூமர் ஆங்கில பார்க்க வேண்டும் என இயக்குனர் முடிவெடுத்து அதற்காக உழைத்திருக்கிறார்.

அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளரும் துணைப் புரிந்திருக்கின்றனர்.

நாம் பார்த்து ரசித்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வைத்து நம்ம ஊர் காமெடியன்ஸ் கொஞ்சம் கலகலப்பு செய்திருக்கின்றனர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/b5b832e2-03e4-4ede-a4be-2f6361d59076-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/b5b832e2-03e4-4ede-a4be-2f6361d59076-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்யோகி பாபுவின் தந்தை ஒரு சயின்டிஸ்ட்.. அவர் ஒரு வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டது போலவே யோகிபாபுவும் ஒரு ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே விவகாரத்து பெறப் முயற்சிக்கிறார்.. அதன்படி யோகிபாபுவின் பூர்வீக அரண்மனையில் சில தினங்கள் தங்கி வசிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. எனவே அதன்படி அந்த பூர்வீக அரண்மனைக்கு செல்கின்றனர்.. இவர்களுடன் இரண்டு உதவியாளர்களும்...