ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் வழக்கமான கதையாக இருக்கக் கூடாது.. வித்தியாசமாக எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டும் என கட்டளையிடுகிறார்.

அதன்படி அடுத்தடுத்து நான்கு கதைகளை சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்..

அதில் முதல் கதை..

ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஜோடி.. இருவரும் காதலர்கள்.. ஒரு கட்டத்தில் வித்தியாசமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.. அதன்படி ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் தாலி கட்டுகிறார் கௌரி.

பெண் வீட்டிற்கு ஆண்மகன் அழைத்து வரப்படுகிறார்.. அங்கே மாமனார் மருமகனுக்கு கட்டளையிட்டு ஒவ்வொரு வேலையாக வாங்குகிறார்.. துணி துவைப்பது முதல் சமையல் செய்வது வரை.. இப்படியாக வாழும் ஒரு ஆண்மகனின் மனநிலையை தான் இந்த முதல் கதை.

இரண்டாம் கதை…

அம்மு அபிராமி & சாண்டி மாஸ்டர் ஜோடி..

இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் சாண்டி வீட்டில் அனுமதி கேட்க செல்கிறார் அம்மு. அங்கு சென்று பின்னர் தான் இவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது முறைப்படி அண்ணன் தங்கை என்று தெரிய வருகிறது.. அதன் பின்னர் காதலர்கள் & பெற்றோர் என்ன செய்தனர்?

3ஆம் கதை..

சுபாஷ் மற்றும் ஜனனி ஜோடி..

இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர்.. ஒரு நாள் அலுவலகத்தில் சுய இன்பம் செய்து விடுகிறார் நாயகன். அதை சிசிடிவியில் தெரிந்துவிடுகிறது. அதனால் வேலை ரத்தாகிறது.. இதனால் வேலை இன்றி தவிக்கும் சுபாஷ் வேறு வழியின்றி ஆண் விபச்சாரனாக மாறிவிடுகிறார். இதனால் காதலர்களுக்கு பிரச்சனை வருகிறது. காதல் வேறு காமம் வேறு என விளக்கம் கொடுக்கிறார்.. இறுதியில் என்ன நடந்தது.?

நான்காம் கதை…

கலையரசன் மற்றும் சோபியா இருவரும் தம்பதிகள்.. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகளும் ஒரு ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர். தங்கள் பிள்ளைகள் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற வேண்டும் என நினைக்கிறார் சோபியா. வேறு வழியில்லாமல் கலையரசனும் அதற்கு ஒத்துக்கொள்கிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் குழந்தைகள் பெற்ற புகழ் வெளிச்சமே அவர்களுக்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது.. அது என்ன? என்பது தான் மீதிக்கதை.

நடிகர்கள்…

ஆதித்யா பாஸ்கர் & கௌரி.. அம்மு அபிராமி & சாண்டி.. சுபாஷ் & ஜனனி.. கலையரசன் சோபியா..

இந்த நான்கு ஜோடிகளுமே கதையின் கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் எங்கும் மிகை இல்லாத நடிப்பை அழகாக கொடுத்திருக்கின்றனர்..

ஒருவேளை ஆண்கள் தாலி கட்டிக்கொண்டு பெண்களைப் போல வீட்டில் அடிமைப்பட்டு கிடந்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பார் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.. நிச்சயம் அப்படி ஒரு வாழ்க்கையை ஆண்களளால் வாழவே முடியாது என ஆண்களுக்கு தோன்றும் அளவிற்கு எடுத்திருக்கிறார்..

இதில் அம்மு அபிராமி சாண்டி வரும் கதை கதை மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.. ஆனால் அதற்கான விளக்கமும் கொடுத்து நகைச்சுவை கலந்து எடுத்து இருக்கிறார் இயக்குனர்

அதுபோல சுபாஷ் ஜனனி ஐயர் கதையில் ஆண் விபச்சாரன்.. ஒரு கட்டத்தில் தன் அம்மாவை ஒரு லாட்ஜில் பார்த்து விடுகிறான்.. இதை காமெடியாக வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

கலையரசனின் கதை நிச்சயம் நம் கண்களை கலங்கடிக்கும்.. ரியாலிட்டி ஷோகளின் குழந்தைகள் பங்கேற்பது அவர்களின் மனநிலை எப்படி எல்லாம் பாதிக்கிறது.. அவர்களும் குழந்தை தொழிலாளர்கள் தான்.. அவர்களை துன்புறுத்தக் கூடாது என்ற கருத்தை முன் வைக்கிறார்.. முக்கியமாக டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொகுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்..

எல்லை மீறியதால் அவர்களின் குழந்தைத்தனம் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..

விக்னேஷ் கார்த்திக் ஆந்தாலாஜி கதையில் படத்தை எடுத்திருந்தாலும் ஒரே படத்தில் அவர் நான்கு கதைகளை சொல்ல முற்பட்டிருப்பது வித்தியாசமான கற்பனை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்கிற அளவிற்கு ஒளிப்பதிவு வேற லெவல் என்றும் கூற வேண்டும்.. அதுபோல பின்னணி இசையும் பாராட்டுக்குரியது.

திட்டம் இரண்டு அடியே ஆகிய படங்களை இயக்கியவர் தான் விக்னேஷ் கார்த்திக்..

இந்தப் படத்தின் டிரைலர் வெளியானபோது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. முக்கியமாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது..

ஹாட்ஸ்பாட் டிரைலரில் பரபரப்புக்காக பல நெகட்டிவ் காட்சிகளை வைத்திருக்கிறார்.. அவையெல்லாம் படத்தில் இல்லை.. ஆனாலும் ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக இயக்குனர் இது செய்திருப்பது சரியா என்று கேள்வி எழுகிறது..

நிச்சயம் இந்த படம் ஒரு ஒரு பரபரப்பை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்..

ஆக இந்த ஹாட்ஸ்பாட்.. ஹாட் மேட்டர் தான்

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/IMG-20240218-WA0020-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/IMG-20240218-WA0020-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்  ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். அவர் வழக்கமான கதையாக இருக்கக் கூடாது.. வித்தியாசமாக எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். அதன்படி அடுத்தடுத்து நான்கு கதைகளை சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.. அதில் முதல் கதை.. ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஜோடி.. இருவரும் காதலர்கள்.. ஒரு கட்டத்தில் வித்தியாசமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.. அதன்படி ஆதித்யா...