1980 – 83 ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்பட உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மார்ச் 22 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரெபெல் படம் வெளியாகிறது

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் வசித்து வருகின்றனர் ஜி வி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆதித்யா பாஸ்கர். இவர்களின் பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர்கள் படிக்க தேர்வாகின்றனர். இதனை அடுத்து மூணாறில் உள்ள தமிழர்கள் பாலக்காடு சென்று படிக்கின்றனர்.. இவர்களுடன் படிக்க கல்லூரி வினோத்தும் இணைந்து கொள்கிறார்.

தன்னுடன் பிஏ ஹிஸ்டரி படிக்கும் மமிதாபைஜும் மீது காதல் கொள்கிறார் ஜிவி பிரகாஷ்..

75% மலையாளிகளும் 25% தமிழர்களும் அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர். பாலக்காடு கேரளா பகுதி என்பதால் மலையாளிகளின் ராகிங் பிரச்சனைகளுக்கு ஜிவி பிரகாஷ் மற்றும் நண்பர்கள் உள்ளாகுகின்றனர்.

இந்த மோதல் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கவே ஒரு பிரச்சனையில் தன் நண்பன் ஆதித்யா பாஸ்கரை இழந்து விடுகிறார் ஜி.வி பிரகாஷ்.

இந்த சூழ்நிலையில் காலேஜ் எலக்சன் வருகிறது. வில்லன் வெங்கி தலைமையில் ஒரு அணியும் நாயகி மமீதா பைஜூ தலைமையில் ஒரு அணியும் என இரு மலையாள மாணவர்களும் போட்டி இடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அவர்களை எதிர்த்து களம் காண்கிறார் நாயகன். தமிழக மாணவர் அணி சார்பாக அந்தோனியை களம் இறக்குகிறார் ஜிவி பிரகாஷ்.

அடுத்தது என்ன நடந்தது? மலையாளிகள் மத்தியில் தமிழக மாணவர்கள் வென்றார்களா என்பது தான் இந்த படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கல்லூரி தொடங்கிய காலத்தில் நாயகி மமீதா மீது காதல் கொண்டு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. ஒரு கட்டத்தில் தன் நண்பனுக்காக வெகுண்டு எழுந்து தமிழர் உரிமைக்காக போராடும் இவரது கதாபாத்திரம் புரட்சிகரமாக அமைந்துள்ளது.

அழகான கண்களாலும் உதடுகளாலும் துள்ளலான நடிப்போடு நம்மை கவர்ந்து விடுகிறார் நாயகி மமிதாபைஜு. இடைவேளைக்குப் பிறகு இவரது கேரக்டர் வலுவில்லை.

மிரட்டல் நடிப்பை கொடுத்து வில்லத்தனம் செய்திருக்கிறார் மலையாள நடிகர் வெங்கி.. இவரது ஆவேசம் இவரது கண்களிலும் இவரது உடல் மொழியிலும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. நிறைய காட்சிகள் இவரது முகசாயல் மலையாள நடிகை பிரித்திவிராஜை நினைவுபடுத்துகிறது.

ஆதித்யா பாஸ்கரின் எமோஷன் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது இவரது முடிவு எதிர்பாராத ஒன்று. கல்லூரி வினோத் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி ஆகியோரின் கேரக்டர்கள் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றன.

கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதிரா ஆகியோரது கேரக்டர்கள் கவனம் பெறுகின்றன. எமோஷனல் காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்திருக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெபெல்’.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் சித்து என்பவரும் இவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் படும் வேதனைகளை உணர்வுபூர்வமாக தன் கேமராவில் படமாக்கி இருக்கிறார்.. கல்லூரி வன்முறை காட்சிகளை ஒரு மிகப்பெரிய கலவர காட்சியாக காட்டி நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு கேரள பாடல் ஒரு காதல் பாடல் மற்ற அனைத்தும் புரட்சிகரமான பாடல்கள் என படத்தின் இசைப் பணிகளுக்கு பக்க பலமாக இருந்திருக்கின்றனர் ஜிவி பிரகாஷ் மற்றும் சித்து.. பின்னணி இசை பல இடங்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

முதல் படத்திலேயே கம்யூனிசம் பேசி நம்மைக் கவர்ந்திருக்கிறார் இயக்குனர். அறிமுக இயக்குநர் என்ற அடையாளத்துடன் வந்திருந்தாலும் அசத்தலான படத்தை கொடுத்திருக்கிறார் நிகேஷ். தமிழ் உரிமை தமிழர்கள் உரிமை என அரசியல் பேசி இருப்பது இவரின் தமிழ் ஆர்வத்தை காட்டுகிறது.

இடைவேளைக்கு முன்பு வரை நட்பு காதல் என சொன்ன பின்னர் அரசியல் சமூகம் நீதி என அனைத்தையும் கலந்து புரட்சி விருந்து படைத்திருக்கிறார்.

ஆக ரெபெல்..கேரளத்தில் தமிழர் உரிமை

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/MV5BYTZjYzNkMjEtMmNhYi00MmFhLWJlZTktYzMyODI0YmU4NWNhXkEyXkFqcGdeQXVyMTQ3Mzk2MDg4._V1_-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/MV5BYTZjYzNkMjEtMmNhYi00MmFhLWJlZTktYzMyODI0YmU4NWNhXkEyXkFqcGdeQXVyMTQ3Mzk2MDg4._V1_-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்1980 - 83 ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்பட உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மார்ச் 22 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் ரெபெல் படம் வெளியாகிறது கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் வசித்து வருகின்றனர் ஜி வி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆதித்யா பாஸ்கர். இவர்களின் பெற்றோர்கள் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பாலக்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர்கள் படிக்க தேர்வாகின்றனர்....