Amigo Garage அமிகோ கேரேஜ் விமர்சனம்

ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்டர் ஆக ஒரு மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை..
தான் உண்டு தன் வேலை உண்டு என தன் பள்ளி வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார் மகேந்திரன்.. ஒரு கட்டத்தில் டியூஷன் டீச்சர் மகளை காதலிக்கிறார். ஆனால் அவளோ இவளை விட மூத்தவர் என்பதால் அந்த காதலில் பிரிவு வருகிறது.
கல்லூரி வாழ்க்கை முடித்த பின்னர் நண்பர்களுடன் சரக்கு தம் என வாழ்க்கை என்ஜாய் செய்து வருகிறார்.. ஒரு கட்டத்தில் அங்கே அமீகோ கேரேஜ் என்ற பெயரில் கார் மெக்கானிக் தொழில் நடத்தி வரும் ஜி எம் சுந்தர் உடன் மகேந்திரனுக்கு நெருக்கம் ஏற்படுகிறது. இதன் மூலம் போதை பழக்கமும் மகேந்திரனிடம் தொற்றிக் கொள்கிறது.
அப்போது வேறு ஒரு கேங்ஸ்டர் உடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது.. இது எல்லாம் வேண்டாம் நீ ஒழுங்காக வேலைக்கு போ என சுந்தர் அட்வைஸ் செய்கிறார்… வேறு வழி இல்லாமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்.. அங்கு பணிபுரியும் நாயகி ஆதிரா ராஜுடன் காதல் ஏற்படுகிறது..
ஆனாலும் வில்லன் கும்பலுடன் உரசல் பற்றிக்கொள்கிறது.. காதலுக்கும் இடைஞ்சல் கொடுக்கிறார் வில்லன்.
இதன் பிறகு நாயகன் என்ன செய்தார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ருத்ரா என்ற கேரக்டரில் மாஸ் காட்டியிருக்கிறார் மகேந்திரன்.. இரண்டு நாயகிகள் இருந்தும் பெரிய ரொமான்ஸ் இல்லை என்றாலும் ஆக்ஷனில் அதிரடி காட்டி இருக்கிறார்.. அது போல் கொஞ்சம் எமோஷன் நடிப்பிலும் கூடுதல் மெனக்கடல் தேவை.. முக்கியமாக தந்தையிடம் சென்டிமெண்டாக பேசும் காட்சியில் பெரிதாக ரியாக்ஷன் இல்லை..
பத்து நிமிடங்கள் வந்து செல்லும் நாயகியாக தீபா பாலு.. அழகாக வருகிறார் காட்சிகள் பெரிதாக இல்லை..
படத்தின் மெயின் நாயகியாக ஆதிரா ராஜ் என்ற மலையாள நடிகை நடித்திருக்கிறார். கண்ணழகிலே நம்மை கவர்ந்து விடுகிறார். கதை ஓட்டத்திற்கும் இரண்டு பாடல்களுக்கு மட்டுமே இவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அமீகோ கேரேஜ் ஓனராக ஜி எம் சுந்தர்.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
தசரதி மற்றும் முரளிதரன் இருவரும் மிரட்டல் வில்லனாக தெறிக்க விட்டுள்ளனர். இவர்களின் தோற்றமே ஒரு வில்லத்தனத்தை காட்டி இருக்கிறது..
ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து.. கேரேஜின் இரவு காட்சிகள் குடும்பத்தின் / பள்ளியின் பகல் காட்சிகள் என அனைத்தையும் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்..
பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.. தேவா பாடிய பிரண்ட்ஷிப் சாங் மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய காரிருள் பாடல் ஆகிய அனைத்தும் ரசிக்க வைக்கிறது..
பாடல் காட்சிகளிலும் கலை இயக்குனரின் கலைவண்ணம் தெரிகிறது. ஸ்ரீமன் பாலாஜி கலைப்பணிகளை கவனித்திருக்கிறார்.
பிரசாந்த் நாகராஜன் என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு கலை இயக்கம் இசை என அனைத்து துறை கலைஞர்களிடமும் அக்கறை காட்டிய இவர் நடிகர்கள் தேர்விலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..
ஒரு கேங்ஸ்டர் கதையை இன்னும் கெத்தாக காட்டியிருந்தால் இந்த அமீகோ கேரேஜ் இன்னும் பேசப்பட்டிருக்கும்..
