நாயகன் பவன்.. இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும்.

நாயகன் பவன்.. கீழ் சாதி. நாயகி மேக்னா எலன்.. மேல் சாதி.

இவர்கள் இருவரும் பள்ளி காலத்து முதலே காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் நாயகி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நாயகனோ சினிமாவில் இயக்குனராக வேண்டும் என சென்னையில் வேலை தேடி அலைகிறார்.

ஒரு கட்டத்தில் வீட்டிற்கு கீழ் ஜாதி மேல் சாதி காதல் தெரிய வரவே தெரிய வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் இயக்குனரான பின்னர் தான் திருமணம் என்கிறார் நாயகன்.. இதனால் இதன் பின்னர் நாயகி என்ன செய்தார்? காதலர்கள் மணம் முடித்தார்களா? நாயகன் இயக்குனர் ஆனாரா? சாதி வெறியர்கள் என்ன செய்தனர்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

நாயகன் பவன். தன்னால் முடிந்தவரை சக்திவேல் என்ற கேரக்டருக்கு பெயர் வாங்கி தர முயற்சித்திருக்கிறார்..

நட்பு பாசம் பரிதவிப்பு என அனைத்தையும் உள்வாங்கி நடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் இவருக்கு அழுகை & ரொமான்ஸ் வரவில்லை என்பது வருத்தமே.. ஆக்ஷனில் மட்டும் அசத்தியிருக்கிறார்..

நாயகி மேக்னா ஹெலன்.. கண்களால் நம்மை கவர்ந்து விடுகிறார்.. நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி..

ஹீரோவின் அப்பாவாக சார்லி.. கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அப்பாவித்தனம் கலந்த நடிப்பில் ஐயோ பாவம் என சொல்ல வைக்கிறார்.

நாயகியின் அண்ணனாக பிர்லா போஸ் முரட்டுத்தனம் கோபம் என முறுக்கிக் கொண்டு நிற்கிறார்..

அரசியல்வாதியாக இம்மான் அண்ணாச்சி.. ஊரில் முக்கிய புள்ளியாக ஜெயச்சந்திரன்.. பஞ்சாயத்து தலைவராக சூப்பர் குட் சுப்ரமணி.. ஆகிவரது கேரக்டர்கள் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் ஜெ பி மேன்.. கிராமத்து அழகை கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை அழகாக கண் முன் நிறுத்தி இருக்கிறார்..

மணி அமுதவன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கிறது.. காதல் பாடல்களும் கவர்கிறது.. அந்தோணி தாசன் பாடிய ‘வண்ண வண்ண இறகு நீ’ பாடல் அருமை.

காலம் காலமாக நாம் பார்த்து சலித்துப்போன காதல் மற்றும் சாதி கதையைத்தான் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி.. அதிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

ஆனால் இது உண்மை சம்பவம் தான். இன்றும் திருச்சி அருகே உள்ள அரிமாபட்டி என்ற கிராமத்தில் காதலிப்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள் என எண்டு கார்டில் 5 தம்பதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ஆக இன்றும் சாதி வெறியில் காதல் சிக்கிக் கொள்கிறது.. காதலர்கள் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் கந்தசாமி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/1186818.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/03/1186818-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்நாயகன் பவன்.. இவர் தான் படத்தின் தயாரிப்பாளரும். நாயகன் பவன்.. கீழ் சாதி. நாயகி மேக்னா எலன்.. மேல் சாதி. இவர்கள் இருவரும் பள்ளி காலத்து முதலே காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் நாயகி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். நாயகனோ சினிமாவில் இயக்குனராக வேண்டும் என சென்னையில் வேலை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு கீழ் ஜாதி மேல் சாதி காதல் தெரிய வரவே தெரிய வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனரான...