திரை விமர்சனம்

அதோ முகம் விமர்சனம்…

அசத்தல் முகம்

‘அதோ முகம்’ படத்தின் நாயகனாக எஸ்.பி.சித்தார்த், நாயகியாக சைதன்யா பிரதாப், அருண் பாண்டியன், ஆனந்த் நாக், சரித்திரன்,ஜெ.எஸ்.கவி மற்றும் பலர்..

மணிகண்டன் முரளி மற்றும் சரண் ராகவன் இசையில் அருண் குமார் ஒளிப்பதிவில் சுனில் தேவ் இயக்கத்தில் வெளிவரும் படம் தான் ‘அதோமுகம்’.

நாயகன் சித்தார்த்.. நாயகி சைதன்யா.. இருவரும் கணவன் மனைவி.. இவர்கள் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு தனி பங்களாவில் வசித்து வருகின்றனர்.

மனைவியை நேசிக்கும் சித்தார்த் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க ஒரு சர்ப்ரைஸ் செய்ய நினைக்கிறார். மனைவியின் செல்போனில் அவளுக்கே தெரியாமல் ஒரு புதிய மொபைல் ஆப் ஒன்றை இன்சால் செய்கிறார்.

அதன்படி மனைவியின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறார். ஆனால் இது அவருக்கே தெரியாமல் பேரதிர்ச்சியாக அமைந்து விடுகிறது.

அதன்படி தன் மனைவியை வைத்து தன்னை சுற்றி உள்ள சதி திட்டங்களை தெரிந்து அதிர்ச்சியடைகிறார்..

அப்படி என்ன நடந்தது? இவர் கொடுக்க நினைத்த சர்ப்ரைஸ் என்ன? மனைவிக்கு நடந்த பிரச்சனை என்ன? இவருக்கே அது பேராபத்தாக முடிந்த அதிர்ச்சி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

நாயகனாக எஸ்பி சித்தார்த் என்பவர் நடித்திருக்கிறார்.. முதலில் அப்பாவியாக தோன்றும் இவர் பின்னர் இவருக்கு தோன்றும் பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகிறார்.. அப்போது வேதனை பரிதவிப்பு என அனைத்தையும் உணர்ந்து தன் கேரக்டரில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகி சைதன்யா பிரதாப்.. முதலில் இவர் அப்பாவியாக தோன்றினாலும் பின்னர் இவரின் ஆக்சன் ரியாக்ஷன் வேற லெவல் ரகம்.. நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.

சித்தார்த்தின் முதலாளியாக நண்பனாக ஆனந்த் நாக்.. கேரக்டரில் கச்சிதம்..

இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின் குமார் உள்ளிட்டோரும் உண்டு..

எதிர்பாராத கேரக்டரில் அருண் பாண்டியன்.. சிறப்பாக இருந்தாலும் ஜெயிலில் இவருக்கு கிடைக்கும் சிறப்பு அந்தஸ்துகள் கொஞ்சம் ஓவர்தான்..

மணிகண்டன் முரளியின் இசையில் பாடல்களும், சரண் ராகவனின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம்..

ஒளிப்பதிவு அருண் விஜயகுமார்.. படத்தொகுப்பு – விஷ்ணு விஜயன்.. கலை இயக்குனர் – சரவணா அபிராமன் கதைக்கு ஏற்ப இவர்களின் படி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு..

ரீல் பெட்டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது..

இயக்குனர் சுனில் தேவ் படத்தை இயக்கியிருக்கிறார்.. மொத்தம் பத்து கேரக்டர்கள் கூட இடம்பெறாத நிலையில் குறைந்த நடிகர்களை வைத்து நிறைவான நடிப்பை வேலை வாங்கி ரசிகர்களுக்கு அருமையான முகத்தை கொடுத்திருக்கிறார்..

சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டாலும் பல திருப்பங்கள் கொடுத்து நம்மை ரசிக்க வைத்து விட்டார்.. படம் முடிந்து விட்டது என்று நினைக்கையில் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பத்தை நம்மை ஆவலுடன் காத்திருக்க வைத்து விட்டார் இயக்குனர் சுனில் தேவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *