உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் வைபவ். அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ளும் வைபவ் சினிமா தொழிலை விட்டு போலீஸ்க்கு உதவியாக க்ரைம் ரிப்போர்ட்ராக பணி புரிகிறார்.

இதனால் கண்டுபிடிக்க முடியாத பல குற்ற வழக்குகளில் இவரின் உதவியை காவல்துறை பெரிதும் நம்புகிறது.

இவரது பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. கையை ஒரு பெட்டியிலும் கால்களை ஒரு பெட்டியிலும் உடலை ஒரு பெட்டியிலும் வைத்து காவல்துறைக்கு சவால் விடுகிறார் மர்ம மனிதன்.. இந்த மூன்று உடல்களும் வெவ்வேறு மனிதர்கள் என்பது தெரிய வருகிறது.

இதனை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் நாயகி தான்யா ஹோப். அதற்கு உதவியாக இருக்கிறார் வைபவ்

இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தவன் யார்? அவர்களின் நோக்கம் என்ன? காவல்துறைக்கு எப்படி உதவினார் வைபவ்? இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை..

 

Vaibhav
Nandita Swetha
Tanya Hope
Saras Menon
Suresh Chakravarthi
Praniti
Darling Madhan
Jeeva Subramaniam
Padman
Vilangu Kicha Ravi
Dasarathi
Dhayalan
Produced by Madhu Nagarajan,

பல படங்களில் நாயகனாகவும் காமெடி செய்து கொண்டிருந்த வைபவ் இந்த படத்தில் சீரியஸ் ஆக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து நம்மை கவர்கிறார்.. ஒரு உதவி இயக்குனராக ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த அவர் திடீரென க்ரைம் ஸ்டோரியில் நுழைந்து அவர் போடும் ஸ்கெட்ச் ரசிக்க வைக்கிறது..

நாயகி தன்யா ஹோப் வேற லெவல்.. காக்கி உடையில் கம்பீரம்.. கலர் உடையில் கண்ணியம் என நம்மை ஈர்த்து விடுகிறார்.

அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். இவரது கேரக்டரும் இவரது மகள் கேரக்டரும் எதிர்பாராத ஒன்று. நர்ஸ் கேரக்டரில் நச் சென்று வந்து நம் மனதை அள்ளிச் செல்கிறார்.

மற்றொரு நாயகியாக சரஸ்மேனன் இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார். முக்கிய கேரக்டரில் சுரேஷ் சக்கரவர்த்தி நடித்திருக்கிறார்.. இவரது கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்து

Written & Direction by: Sherief
Music: Arrol Corelli
Dop: Balaji K Raja
Executive Producer: Udhayakumar Balaji
Editor: Muniez
Art Director: ManiMozhiyan Ramadurai
Singers: GV Prakash Kumar, Shreya Goshal, Mathichiyam Bala, Pranithi, Raghotham, Sherief
Lyrics: Vivek – Shereif – Arrol Corelli
Choreography: Amir Ads
Stunt: Billa Jagan & Om Prakash
PRO: Sathish Kumar
Sound Design: Randy Raj
Production house : Mithun Mithra Productions
Producer: Madhu Nagarajan

ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப்.. இறந்து போன பெண்களுடன் உடலுறவு கொள்ளும் மனித மிருகங்களை பற்றிய கதையை வித்தியாசமான முறையில் கையாண்டு இருக்கிறார்.

எல்லா குற்றங்களுக்கும் தண்டனை இருப்பது போல இந்த பாவ செயலுக்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என இந்த ரணம் படத்தை இயக்கியிருக்கிறார் ஷெரிஃப்.

இயக்குனருக்கு பக்க பலமாக இருந்துள்ளனர் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்… இசைப் பணியை அரோல் கரோலி செய்ய ஒளிப்பதிவை பாலாஜி கே ராஜா செய்திருக்கிறார்.. முக்கியமாக கிரைம் திரில்லர் காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசையை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். ஆனால் கொஞ்சம் இரைச்சலான இசை காதை கிழிக்கிறது.

பிணவறை காட்சிகள் நம்மை நிச்சயம் பயப்படுத்தும் என்கிற அளவிற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஆக இந்த ரணம்.. கிரைம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்து..

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/MV5BOTdiOGZiMGYtM2NhZS00ZjViLWI5MzItMDIzZWNhOTFkZGQ3XkEyXkFqcGdeQXVyMTUzNTgzNzM0._V1_.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2024/02/MV5BOTdiOGZiMGYtM2NhZS00ZjViLWI5MzItMDIzZWNhOTFkZGQ3XkEyXkFqcGdeQXVyMTUzNTgzNzM0._V1_-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருக்கிறார் நாயகன் வைபவ். அங்கு மற்றொரு உதவி இயக்குனராக பணி புரியும் சரஸ்மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத பெரிய விபத்தில் சிக்கிக் கொள்ளும் வைபவ் சினிமா தொழிலை விட்டு போலீஸ்க்கு உதவியாக க்ரைம் ரிப்போர்ட்ராக பணி புரிகிறார். இதனால் கண்டுபிடிக்க முடியாத பல குற்ற வழக்குகளில் இவரின் உதவியை காவல்துறை பெரிதும் நம்புகிறது. இவரது பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. கையை ஒரு பெட்டியிலும்...