இ-மெயில் திரைப்பட விமர்சனம்..
நாயகி ராகினி நான்கு தோழிகளுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார். மனோபாலா நடத்தும் கைலாசம் என்ற டிராவல் நிறுவனத்தில் பணிபுரிகிறார் நாயகி.
இவரது அப்பார்ட்மெண்டில் ஒரு குடியிருப்பில் வசிக்கிறார் நாயகன் அசோக்.. நாட்கள் செல்ல செல்ல நாயகனும் நாயகியும் காதலிக்க பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர்.
ராகினிக்கு எப்போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் அதிகம் எனவே அடிக்கடி வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார். இதனால் பணமும் சம்பாதிக்கிறார் பணத்தையும் இழக்கிறார் ஒரு கட்டத்தில் சில நபர்களால் இவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
இவரிடம் ஒரு ஹார்ட் டிஸ்க் இருப்பதாகவும் அதில் பல முக்கிய புள்ளிகளின் கருப்பு பண விவரங்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. இதனை அடுத்து ஒரு லேடி மினிஸ்டர் இவரை ஒரு வில்லன் கோஷ்டியால் துரத்துகிறார்.
இதனை எப்படி எதிர்கொண்டார் ராகினி? இதற்கு அசோகின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் அசோக்கை விட நாயகி ராகினி திரிவேதிக்கு காட்சிகளும் அதிகம் முக்கியத்துவமும் அதிகம்.. எனவே அவரின் நடிப்பு குறித்து பேசுவோம்..
நாயகருடன் காதல்.. வில்லன் கும்பலுடன் மோதல்.. ஆக்சன் என அதிரடி காட்டி இருக்கிறார் ராகினி.. நாயகனை விட இவரது முகத்தில் முதிர்ச்சி அதிகமாகவே தெரிகிறது.
ஹீரோ அசோக் படு ஸ்மார்ட்டாக வருகிறார்.. இங்கிலீஷ் ஹிந்தி என செம ஸ்டைலிஷ் ஆகவும் பேசுகிறார்.. நாயகனுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இவரது கேரக்டர் திருப்புமுனை காட்சிகள் எதிர்பாராத ஒன்றாகும்..
ராகினியின் அப்பார்ட்மெண்ட் தோழிகள் கொஞ்சம் கதைக்கும் கவர்ச்சிக்கும் உதவி இருக்கின்றனர்..
இவர்களுடன் ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ ஆகியோர் உண்டு.. லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.
கைலாசம் டிராவல் நடத்தும் நபராக மறைந்த மனோபாலா நடித்திருக்கிறார். கொஞ்சம் கடுப்பேற்றி காமெடியும் செய்து இருக்கிறார்.
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு செய்ய கவாஸ்கர் அவினாஷ் இசை அமைக்க ஜுபின் பின்னணி இசை அமைத்திருக்கிறார்..
இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் இயக்கியிருக்கிறார்..
ஆன்லைன் விளையாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்.. கருப்பு பணத்தால் இந்த நாட்டில் விளையாடும் அரசியல்வாதிகளையும் தோலுரித்தி காட்டி இருக்கிறார் இயக்குனர்.
சொல்ல வந்த மெசேஜ் ஒரு பக்கம் என்றாலும் அதற்காக தேவையற்ற பல காட்சிகளை காட்டி ரசிகர்களை நோகடித்து விட்டார்.. திரைக்கதையிலும் ஒளிப்பதிவியிலும் பாடல்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த ஈமெயில் நிச்சயம் நமக்கு ஒரு நோட்டிபிகேஷன் ஆக வந்திருக்கும்..