Latest:
திரை விமர்சனம்

ஹனு-மான் திரை விமர்சனம்

Directed By : Prasanth Varma

Produced By : Primeshow Entertainment – Niranjan Reddy

Casting : Teja Sajja, Amritha Aiyer, Vinay Rai, Raj Deepak Shetty, Vennela Kishore, Samuthirakani, Varalakshmi Sarathkumar

Music By : Anudeep Dev, GowraHari, Krishna சவூரபி

பிரம்மாண்டமான பொருட் செலவில் 12 கோடி ரூபாய் செலவில் ஹனுமான் படத்தை உருவாக்கி உள்ளனர்.

இப்படம் பான் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் & ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

மேலும் ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியானது.

தேஜா சஜ்ஜா நாயகன்.. இவருக்கு ஹனுமானின் ரத்தத்தில் உருவான மிகசக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது.

இதனால் மாபெரும் சக்தி பெற்ற பலசாலியாக மாறுகிறார். இந்த சக்தியை பெற்ற தேஜா பல சேவைகளை செய்து மக்களுக்கு உதவி புரிகிறார்.

நாயகனின் மாபெரும் சக்தி அறிந்து கொண்ட வில்லன் வினய் அதனை முறியடிக்க பல சதி திட்டங்கள் போடுகிறார். சக்தியை பறித்துக் கொண்டு அவர் பல சாகசங்கள் செய்ய நினைக்கிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது? தேஜா என்ன செய்தார்? ஹனுமான் சக்தி என்ன செய்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை ‘ஹனு-மான்’.

தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினய் ராய் வில்லனாக நடிக்க நாயகனின் அக்காவாக வரலட்சுமி.

இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு ஆகியோரின் காமெடி படத்திற்க்கு செம ஹைலைட்..

ஹீரோ தேஜா சஜ்ஜா மிகவும் எதார்த்த நாயகன்.. சக்தி கிடைத்த பின் அவர் செய்யும் சாகசங்கள் சூப்பர் மேன் லெவல் என்று கூறலாம். அதிலும் காமெடி ரசிக்க வைக்கிறது.

தெலுங்கில் நம்ப முடியாத மாஸ் காட்டுவர் பாலையா.. அவரை வைத்து கிண்டலடித்து ரசிகர்களை குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.. பாலையா போல் ரயிலை விரலால் நிறுத்தும் சீன் வேற லெவல் காமெடி.

ஹனுமான் பட நாயகியாக அமிர்தா ஐயர்.. ஹீரோ செய்ய வேண்டிய சூப்பர் சாகசங்களை செய்து அசத்தியிருக்கிறார்.

வெண்ணிலா கிஷோரின் காமெடி செம.. சமுத்திரக்கனியின் வேடம் படத்திற்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

நாயகனின் அக்காவாக நடித்த வரலட்சுமி தம்பியை காப்பாற்ற அதிரடி இறங்கி இருக்கிறார். வரலட்சுமி கேரக்டர் வீண் அடிக்கப்பட்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் நிலையில் திடீரென மாஸ் காட்டி ஒரு அசத்தி விட்டார்.

வில்லனாக வினய் ராய்.. சூப்பர் மேன் ஆக வேண்டும்.. சூப்பர் சாகசங்கள் செய்ய வேண்டும் என ஹீரோவை போல ஸ்டைலிஷ் வித்தை காட்டி இருக்கிறார்.

இயக்குனர் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (பி.வி.சி.யூ) தொடங்குகிறார் பிரஷாந்த் வர்மா..

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரன்.

அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

ஹீரோவுடன் ஒரு குரங்கு ஒன்று நடித்திருக்கிறது.. அது நிச்சயம் குழந்தைகளை மட்டுமல்ல நம்மையும் ரசிக்க வைக்கும்.

ஹனுமான் என்ற பெயரில் காரணத்தால் இதை ஒரு ஹிந்து ஆன்மீக படம் என நினைக்க வேண்டாம்.. அந்த அளவிற்கு அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் விஷுவல் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் அழகுப்படுத்தி காட்டி இருக்கின்றனர்.

சூப்பர் ஹீரோ பேண்டஸி கதையை VFX மூலம் அழகுப்படுத்தி மக்களை ஒன்ற வைத்துள்ளனர். நிச்சயம் இந்த பொங்கல் பண்டிகைக்கு அனுமான் என்று அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.