‘மிஷன் சாப்டர் 1’ பட விமர்சனம்

இயக்குனர் விஜய்.. நடிகர் அருண் விஜய்.. தயாரிப்பு நிறுவனம் லைக்கா ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மிஷன் சாப்டர் 1’. இந்த படம் இதற்கு முன்பு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று பெயரிடப்பட்டிருந்தது.
தற்போது தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் வெளியாவதால் ‘மிஷன் சாப்டர் 1’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தனது செல்ல மகள் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது நாயகன் அருண் விஜய்க்கு.. எனவே தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு லண்டன் செல்கிறார்.
இதற்காக ஹவாலா பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர் செல்லும் போது லண்டனில் அவரது பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் போது ஏற்பட்ட தகராறில் போலீசை அடித்து விடுகிறார் அருண் விஜய்.
எனவே அவரை லண்டன் சிறையில் அடைக்கிறது லண்டன் காவல்துறை. அங்கு ஜெயிலராக பணிபுரிகிறார் நாயகி எமி ஜாக்சன்.
அங்கு ஏற்கனவே சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை அங்கிருந்து தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார் வில்லன். அவர்களது திட்டங்களை அறிந்து கொண்ட அருண் விஜய் என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு கேரக்டர்காக படத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய்.. இந்த படத்திலும் பாசம் ஆக்ஷன் என அனைத்து உணர்வுகளுக்கும். உருவம் கொடுத்திருக்கிறார் அருண் விஜய். லண்டன் தீவிரவாதிகளை அடித்து நொறுக்கும்போது தெறிக்க விட்டுள்ளார் அருண் விஜய்.
படத்தின் நாயகி கேரக்டருக்கும் ஆக்சனுக்கும் அருமையாக ஒத்துப் போகிறார் எமி ஜாக்சன்.
இவர்களுடன் ‘சித்தா’ நிமிஷா சஜயன், பரத் போப்ன்னா உள்ளிட்டோரும் உண்டு. கேரளத்து சேச்சி நிமிஷா சஜயனின் நடிப்பு ரசிக்கும் ரகம்.
படம் முழுவதும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார் வில்லன்.. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஆக்ஷன் செய்திருக்கிறார்.
சைவம் தெய்வத்திருமகள் உள்ளிட்ட குடும்ப பாங்கான படங்களை இயக்கியவர் விஜய். எனவே இந்த படத்திலும் அதை எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். இதில் முழுக்க முழுக்க ஆக்சன் தான் என ரவுண்ட் கட்டி அடிக்க முயற்சித்துள்ளார் டைரக்டர்.
இந்தக் கூட்டணியில் தன் பங்கிருக்கு இசையை கொடுத்து மிரட்டி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.. ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை செம.
ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
பொதுவாகவே ஒரே பாணியிலான கதையை இயக்கும் இயக்குனர்கள் சில நேரம் தங்களது ஃபார்முலாவை மாற்றும் போது தடுமாற செய்வார்கள்.. விஜய்க்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ஒரே அடியாக ஆக்சன் ரத்தம் என இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இந்த மிஷின் சாப்டர் ஒன்றை கொடுத்து இருக்கிறார் விஜய்.

