திரை விமர்சனம்

அயலான் பட விமர்சனம் 4/5

2030ல் மக்கள் தொகை அதிகமானதால் வாயு எனர்ஜி அதிக அளவில் தேவைப்படுகிறது. பூமிக்கு மிக ஆழமான ஒரு இடத்தில் இருந்து எடுக்க அதற்கான பல முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் பேசுகிறார் வில்லன்.

இதனை தெரிந்து கொண்ட வேற்றுகிரக ஏலியன் இதனை தடுக்க முயற்சிக்கிறது.
இதனால் ஏலியனுக்கும் வில்லன் ஆரியனுக்கும் (சரத்) பிரச்சனை முற்றுகிறது. இந்த சூழ்நிலையில் இயற்கை காதலன் அர்ஜுன் உடன் (சிவகார்த்திகேயனுடன்) கைகோர்க்கிறது ஏலியன்.

ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு மாறுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை..

நடிகர்கள்…

அர்ஜுனாக சிவகார்த்திகேயன்.. டான்ஸ், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என தூள் அடிக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் கேரக்டற்கு முக்கியத்துவம் கொடுத்தி இருக்கிறார். யோகி பாபு மற்றும் கருணாகரன் காமெடிகள் பட்டையை கிளப்புகின்றன.

வில்லனாக சரத் மிரட்டி இருக்கிறார். சரத் கேல்கர் வில்லனாக நடித்து இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து உள்ளார்.

ரகுமானின் பாடலும் பின்னர் இசையும் படத்தில் கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளன.

நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி.

நிச்சயம் பொங்கலுக்கு குழந்தை மற்றும் குடும்பத்துடன் ரசிக்க வைக்க படம் கொடுத்துள்ளனர் சிவகார்த்திகேயன் மற்றும் ரவிக்குமார்.

ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிய உணர்வை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.அதற்காக உழைத்த அனைவருக்கும் அப்ளாஸ் கொடுக்கலாம்.

இந்த பிரபஞ்சம் இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானது.

பழங்காலத்து கதையை பல இயக்குனர்கள் சொல்லிக் கொண்டிருக்க 2030 காலத்திற்கு இந்த கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் ரவிக்குமார். படத்தில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து கமர்சியல் ஐட்டங்களையும் கலந்து கொடுத்து அயலானை அசர வைத்திருக்கிறார் இயக்குனர்.