மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்..

ஒரு கிறிஸ்துமஸ் திருநாளன்று ஒரு ஹோட்டலில் சந்திக்கின்றனர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப். கத்ரீனா உடன் ஒரு ஒரு குழந்தை இருக்கிறார். கணவன் இல்லை.
எதிர்பாராத சூழலில் காத்ரினாவுக்கு உதவுகிறார் விஜய் சேதுபதி. எனவே அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று உபசரிக்கிறார்.
அடுத்து சில மணி நேரங்களில் கத்ரீனாவின் கணவன் மர்மமான முறையில் கொல்லப்பட்டு சடலமாக கிடைக்கிறார். இதனால் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார் விஜய் சேதுபதி.
அதன் பிறகு என்ன நடந்தது கத்ரீனாவின் கணவனை கொன்றவர் யார்.? விஜய் சேதுபதி அங்கிருந்து தப்பித்து செல்ல நினைக்க என்ன காரணம்.? என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்..
தயாரிப்பு
டிப்ஸ் ஃபிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள்
விஜய் சேதுபதி
காத்ரீனா கைஃப் ராதிகா ஆப்தே
ராதிகா சரத்குமார் சண்முகராஜன்
கவின் பாபு
மற்றும் பலர்
இயக்குநர்
ஸ்ரீராம் ராகவன்
மக்கள் தொடர்பு
யுவராஜ்
விஜய் சேதுபதி கதையின் நாயகனாக இருந்தாலும் டைட்டில் கார்டில் முதலில் கத்ரீனா கைஃப் பெயர் தான் இடம் பெறுகிறது.
கதைக்கு என்ன தேவையோ அதை எங்கும் மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. துருதுருவோன பேச்சை நிறுத்தி இதில் நிதானமாக பேசி இருக்கிறார்.
படத்தில் வசனங்கள் சில இடங்களில் நிச்சயம் சிந்திக்கவும் வைக்கிறது. முக்கியமாக கத்ரீனாவின் போட்டோவை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருக்கிறீர்கள் என்கிறார் விஜய் சேதுபதி.
அதற்காக அழுகிற போல போட்டோ எடுத்து வைக்க முடியுமா? அதுபோல போட்டோ யாராவது எடுத்து வைத்து பார்த்தீர்களா என்று கேட்டபோது அட ஆமா தானே என்று நினைக்க தோன்றுகிறது.
இது ஒரு ஹிந்தி படமாக உருவாக்கப்பட்டாலும் தமிழிலும் எடுக்கப்பட்டுள்ளதா ரசிக்க முடிகிறது.
விஜய் சேதுபதி, ராதிகா, சண்முகராஜன் ஆகியோரது தமிழ் உச்சரிப்புகள் சரியாக பொருந்துகிறது போல கத்ரீனாவுக்கும் தமிழ் உச்சரிப்புகள் பொருந்தி போவது ஆச்சரியம்தான். அதற்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார் தீபா வெங்கட்.
பழைய நடிகர் ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம் பெறுகிறார். கபாலி பட நாயகி ராதிகா ஓரிரு காட்சிகளில் வருகிறார். ஆனால் அவரது காட்சிகள் முழுமையாக இடம் பெறவில்லை என்பது வருத்தமே.
எனவே இது ஒரு ஹிந்தி படத்தை பார்ப்பது போல உணர்வு இல்லாமல் தமிழ் பட உணர்வே தெரிகிறது.
இது காதல் படமா? திரில்லர் படமா? என்ற குழப்பம் ஒரு வகையில் நீடிக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக சொல்லாத இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
ஒரு கிறிஸ்மஸ் இரவில் நடக்கும் கதையை விடிவதற்கு சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கின்றனர்.
