Latest:
திரை விமர்சனம்

பாடலாசிரியர் பிரியன் நடித்த ‘அரணம்’ பட விமர்சனம்

ஒரு கிராமத்திற்குள் தன் முதிய காலத்திற்கு ஏற்ற வகையில் ஒரு பெரிய பங்களாவை கட்டி வாழ்கிறார் ஒரு பெரியவர். தன்னுடைய மகன்கள் சரியாக இல்லாத காரணத்தினால் வளர்ப்பு மகன்களை எடுத்து அவரை வாரிசுகளாக கொண்டாடுகிறார்.

அவர் ஒரு கட்டத்தில் இறந்து போகவே, பெரியவரின் வாரிசான ப்ரியன் தன் மனைவி வர்ஷாவுடன் அந்த பங்களாவில் வசிக்கிறார்.. அப்போது அமானுஷ் சக்திகள் நிறைய அங்கு இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.. அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதி கதை.

என்னதான் சினிமாவில் பல ஆண்டுகள் பயணித்து வந்தாலும் ஒரு நாயகனாக தன் பணியே சிறப்பாக செய்ய வேண்டும் என முயற்சி செய்திருக்கிறார் பாடல் ஆசிரியர் பிரியன். எனவே காதலிலும் பாசத்திலும் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார்.

அழகும் வசீகரமும் நிறைந்த நாயகியாக வர்ஷா. குடும்ப பங்கான வேடங்களுக்கு நன்றாகவே பொருத்தம்.

ராட்டினம் பட ஹீரோ லகுபரன் இதில் பிரியனின் தம்பியாக நடித்திருக்கிறார். எனவே அவருக்குப் பாடலும் சண்டைக் காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவருக்கு ஜோடியாக கீர்த்தனா.

இந்தப் படத்தின் ஆணிவேராக கருதப்படும் பெரியவரின் முகத்தை கடைசி வரை காட்டவே இல்லை என்பது ஏனோ?

இசையமைப்பாளர் சாஜன் இசை அமைத்துள்ளார். பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கப்படியாக இருந்தாலும் நிறைய பாடல்கள் தேவையா என்ற கேள்வி எழுகிறது.. ஒருவேளை பாடலாசிரியர் ஹீரோவாகி விட்டதால் நிறைய பாடல்களை வைத்து விட்டாரா என்னவோ?

நித்தின்.கே.ராஜ், இ.ஜே.நௌசத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பட்ஜெட்டுக்கு எற்ப லைட்டிங் அமைத்து காட்சிகளை வடிவமைத்து உள்ளனர். எடிட்டர் பிகே.

பாலா சஹானா முருகானந்தம் ஆகியோர்களுக்கும் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இந்த ஹீரோ பாடலாசிரியர்.. எனவே அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்து இருந்தால் இந்த அரணம் ரணம் இல்லாமல் இருந்திருக்கும்.