Latest:
திரை விமர்சனம்

கும்பாரி விமர்சனம்.: காதலா? நட்பா? பாசமா?

விஜய் விஷ்வா – அருண் (கதாநாயகன்) & நலீப் ஜியா – ஜோசப் (நண்பன்) இருவரும் சிறு வயது முதலே உற்ற தோழர்கள்..

டிவி கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் விஜய் விஷ்வா.. ஒரு நாள் இவர் ஒயர் வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது நாயகி மஹானா அந்தப் பக்கமாக ஓடி வருகிறார்.

என்னை ஐந்து பேர் துரத்தி வருகிறார்கள். என்னை அவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்கிறார். அவர் அந்த கும்பலிடம் சண்டையிட்டு மஹானாவை காப்பாற்றுகிறார்.

அப்போது நாங்கள் Youtube பிராங்க் ஷோ செய்து கொண்டிருக்கிறோம் என விஜய் விஷ்வாவை கலாய்த்து விடுகிறார் மஹானா. இதனால் கோபம் அடையும் விஜய் விஷ்வா நாயகி மகனாவை அடித்துவிட்டு “உங்களைப் போன்றவர்களால் தான் உண்மையாக உதவி கேட்பவர்கள் யார் என்பது கூட தெரியவில்லை என அட்வைஸ் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மஹாகாணவை அறைந்த விஜய் விஸ்வாவுக்கு பாராட்டுக்கள் குவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில் விஜய் விஷ்வாவை காதலிக்க தொடங்குகிறார் மஹானா. ஒரு கட்டத்தில் மஹானாவின்அண்ணன் ஜான் விஜய்யிடம் சம்மதம் கிடைக்காத நிலையில் காதலனை பதிவு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அப்போது நாயகிக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை.

இதனால் பதிவு திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரம் கடந்தால் அவருக்கு 21 வயது பூர்த்தி ஆகிவிடும் என்பதால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை எழுகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? ஒரு வாரம் கழித்து திருமணம் நடந்ததா? அண்ணனின் சம்மதம் கிடைத்ததா? அண்ணன் என்ன செய்தார்? காதலர்களை பிரித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், செந்தி குமாரி ,காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அபி சரவணன் என்பவர் தான் தற்போது விஜய் விஷ்வா என்ற பெயரில் நடிக்கிறார். கதைக்குத் தேவையான ஹீரோயிஷத்தை கொடுத்திருக்கிறார்.

அழகில் மட்டுமல்ல நடிப்பிலும் நம்மை கவர்கிறார் மகானா. அவருக்கான காட்சிகள் இளமைத்துள்ளல் அதிகம்.

காமெடி கலந்த வில்லத்தனத்தை செய்து இருக்கிறார் ஜான் விஜய். இவருடன் வரும் அடியாட்கள் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர். முக்கியமாக சாம்ஸ் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளன.

நலீப் ஜியா.. காதலுக்கு உதவும் நண்பனாக நடித்திருக்கிறார். ஜாங்கிரி மதுமிதா தோழியாக நடித்திருக்கிறார்.

காமெடி என்ற பெயரில் அம்மன் வேடமிட்டு கொஞ்சம் சோதிக்கிறார் நடிகை மீனாள்.

நட்பு காதல் அண்ணன் தங்கை பாசம் என மூன்றையும் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி காட்சிகள் கொள்ளை அழகு.

இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

ஒரு குத்துப்பாட்டும் ஒரு காதல் பாட்டு ரசிக்க வைக்கிறது.. நானும் நீயும் சேர்ந்திடவே மனம் ஏங்குதே.. நாளை வரும் சோகம் கடந்திடுமே என்ற பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன..

இடையிடையே அண்ணன் தங்கை பாசத்தை காட்ட பழைய பாடல்களை ஒளிபரப்பி கொஞ்சம் கடுப்பேற்றி விடுகின்றனர்.. அதில் பெரிதாக உணவு பூர்வமான காட்சிகள் இல்லை என்பது வருத்தம்..

நட்பை சொன்ன விதத்திலும் காதலை சொன்ன விதத்திலும் பெரிதாக சுவாரசியம் இல்லை.

கும்பாரி என்ற சொல் நட்பை குறிப்பதாகும் அதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் இந்த கும்பாரியை நிச்சயம் கொண்டாடி இருக்கலாம்.