வட்டார வழக்கு விமர்சனம் 3.5/5.. கிராமத்து வாழ்வியல்
சமீப காலமாக 1980 களில் நடக்கும் கதைக்களத்தை பல படங்களில் பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் தற்போது இணைந்துள்ள படம் தான் இந்த ‘வட்டார வழக்கு’.
கிராமத்து வாழ்வியலை திரைப்படமாக கொடுத்திருக்கிறார் கண்ணுசாமி ராமச்சந்திரன். இவர்தான் இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளர் ஆவார்.
இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஆண்டாண்டு காலமாக தொடரும் பகை. பல தலைமுறை தாண்டியும் அவர்களுக்கிடையே கனன்று எரியும் வன்முறைத் தீயாக உருவெடுக்கிறது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கத்தில் நாயகன் நம்பி சந்தோஷ் மற்றும் ரவீனா ரவி இடையே ஒரு காதல்.. ரவீனாவின் தந்தை உடல்நிலை முடியாத காரணத்தால் படுத்த படுக்கையாக இருக்கிறார் தந்தையை கவனித்துக் கொண்டு அறிவொளி இயக்கம் மூலம் வயதானவர்களுக்கு பாடம் நடத்துகிறார் ரவீனா.
இந்த சூழ்நிலையில் நாயகனை பழித்திருக்க திட்டம் போடுகிறது எதிர்தரப்பு. அதன்பிறகு என்ன ஆனது?பழிதீர்க்கப்பட்டதா? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் வந்திருக்கும் படம் தான் இந்த வட்டார வழக்கு.. கிராமத்து மண்வாசையை மக்களுக்கு கலந்து கொடுப்பதில் எப்போதுமே நான் ராஜா இடம் நிருப்பித்திருக்கிறார் இளையராஜா.
அதுமட்டுமில்லாமல் 1980களில் தன்னுடைய இசையில் சூப்பர் ஹிட்டான பாடல்களை அவ்வப்போது காதலர்களுக்காக ஒலிக்கவும் செய்திருக்கிறார் இளையராஜா.
கரிசல் எழுத்தாளர் மறைந்த கி.ரா அவர்களின் கதை மாந்தர்கள் பேசுவதைப் போன்ற வசனங்கள் படம் முழுவதும் நிரம்பி கிடைக்கின்றன. (டைட்டிலில் கி. ராவை இயக்குனர் நினைவுகூர்ந்து உள்ளார்)
இப்போதெல்லாம் பார் கிளப் என மாறிவிட்ட நிலையில் அன்றைய தினங்களில் டீக்கடைகளே.. கிராமத்து நக்கல் நையாண்டி-களுக்கு டீக்கடை காட்சிகள் சிரிப்பலையில் அதிரும
“நானே ஊமை கனவு கண்டது போல் சொல்ல முடியாமல் இருக்கிறேன்” என்று சொல்லும் தாத்தாவிடம் ஒரு இளந்தாரி” ஊமை என்னதான் கனவு கண்டா?” என்று கேட்க தாத்தா தரும் விளக்கம் செம்ம..
கதையின் நாயகனாக சந்தோஷ் நம்பி நடித்திருக்கிறார் ஒரு கிராமத்து முரட்டு இளைஞனின் உருவத்தை நகலெடுத்த போல நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகி ரவீனா ரவியின் ‘தொட்டிச்சி’ கேரக்டர் கிராமத்துப் பெண்ணின் உணர்வுகளை அப்படியே நடிப்பில் எதிரொலிக்க செய்திருக்கிறார். முக்கியமாக தந்தைக்கு பணிவிடை செய்யும் பெண்ணாகவும் காதலனுக்கு கண் ஜாடை காட்டும் பெண்ணாகவும்.. தொட்டிச்சி கதாபாத்திரம் மக்கள் மனதை தொடும்.
ரேக்ளா ரேஸ், ஆட்டு கிடா முட்டு, துக்க வீடு என ஒவ்வொன்றுக்கும் பின்னணி இசை உடன் காணச் செய்கிறது.. ஒளிப்பதிவும் படத்தொகுப்பு நேர்த்தி.
படத்தில் ஏகப்பட்ட கிராமத்து கெட்ட வார்த்தைகளில் வாடை அடிக்கிறது. ஆனாலும் இவையெல்லாம் கிராமத்து மக்களின் வழக்கமான ஒன்றுதான்
இளையராஜா இசையமைக்க இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார்.
எளிமையான கதையை வட்டார வழக்குடன் கிராமத்து வாழ்வியலாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமச்சந்திரன். டீக்கடை தாத்தா முதல் வில்லன் வரை என ஒவ்வொரு கேரக்டரையும் நம் முன்னோர்களை பார்ப்பதாகவே தோன்றும்.
மதுரா டாக்கீஸ் & ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ள படம்.
வருகிற 29ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறது.
இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் வெளியிடுகிறது அதுபோல மக்கள் தொடர்பாளரும் (சுரேஷ் சந்திரா) இந்த படத்திற்கு தொகை எதுவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.