ஜிகிரி தோஸ்த் விமர்சனம்…

இயக்குனர் அறன் வி இயக்கத்தில் ஷாரிக், அம்மு அபிராமி, அறன் வி, பவித்ரா லட்சுமி என பல நடித்திருக்கும் படம் ஜிகிரி தோஸ்த்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.
ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன்.
இந்த படத்தை எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ளனர்.
ஷாரிக்ஹாசன், அரண், விஜே ஆஷிக் ஆகியோர் நல்ல நண்பர்கள்.
ஷாரிக் ஆசனுக்கு ஒரு கட்டத்தில் பிரச்சனை வருகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்படுகிறார். எனவே நண்பர்கள் அவரை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் செல்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு பெண் கடத்தப்படுவதை பார்க்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றினார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஷாரிக்ஹாசன் தான் முதன்மை நாயகன் என்றாலும் டீசன்டாக வந்து செல்கிறார்.
3 நண்பர்களில் நம்மை அதிகம் கவர்ந்திருப்பவர் லோகியான விஜே ஆஷிக்.
அரண் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
இது காமெடி கதையா திரில்லர் கதையா என இயக்குனர் குழம்பி விட்டாரா அல்லது நம்மை குழப்பம் முயற்சித்தார்? என தெரியவில்லை. காரணம் இரண்டிலும் தோல்விதான்.
இவர்களுடன் அம்மு அபிராமி, பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அம்மு அபிராமி மற்றும் பவித்ர லட்சுமி என இரு நாயகிகள் இருந்தும் அவர்களால் பெரிதாக ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்களின் காட்சிகளும் குறைவு நடிப்பதற்கான வாய்ப்பும் குறைவு.
அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஆர்.வி. சரண்.
அஸ்வின் விநாயகமூர்த்தியின் பின்னணி இசை பெரிய பலமே.
படத்தொகுப்பு பணி அருள் மொழி வர்மன், சண்டை பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே. பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார்.
யூகிக்க முடிகின்ற கதை என்பதால் பல காட்சிகளில் சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது.. அதை தவிர்த்து இருக்கலாம்.
ஆக. ஜிகிரி தோஸ்து விறுவிறுப்பு குறைவு…
