திரை விமர்சனம்

சலார் விமர்சனம்.; கே.ஜி.எஃப் டைரக்டர் + பாகுபலி ஹீரோ கூட்டணி எப்படி

தேவா – வரதாவின் நட்பு எப்படிப்பட்டது.. என தொடங்கி அதிலிருந்து கதையைத் ஆரம்பித்து இருக்கிறார் டைரக்டர் பிரஷாந்த் நீல்.

படம் ஆரம்பித்த 10 – 15 நிமிடங்களில் இவர்களின் பிரிவும் காட்டப்படுகிறது. அதன் பிறகு தேவா எவ்வளவு ஆபத்தானவன்.. அவன் வெடித்தால் என்னவாகும் என ஒவ்வொரு காட்சிகளையும் நகர்த்தி ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

இந்தியாவுக்கு வருகிறார் ஸ்ருதிஹாசன். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரைப் துரத்துகிறது.

அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில்,தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது.

ஆனால் அந்த தேவா ஏதோ ஒரு கிராமத்தில் தனது தாய் ஈஸ்வரி ராவ் உடன் வசித்து வருகிறார்.

தனது கண் முன்னால் எவ்வளவு பெரிய கொடூரமா நடந்தாலும் அதைக் காணாதது போலச் செல்வார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக கோபத்தையும் தன்னுள் அடக்கி வாழ்பவர்.

அமைதியான தேவா-வால் ஆத்யாவை காப்பாற்ற முடியுமா? கான்சார் உலகில் வரதாவுடன் (பிருத்விராஜ் சுகுமாரன்) பகையாக மாறியது எப்படி? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு நல்ல திரைக்கதை படங்கள் சரியாக அமையவில்லை. ஆனால் சலார் கை கொடுக்கும் என நம்பலாம். முதல் பாதியில் அமைதியாக இருக்கும் பிரபாஸ் இரண்டாம் பாதியில் அதிரடி அதகளம் செய்து இருக்கிறார். பிரித்திவிராஜ் கேரக்டரும் பிரகாசிக்கும் வகையில் உள்ளது.

சில இடங்களில் ராஜமௌலியின் ஃபார்முலா தெரிகிறது. அவரின் திரைக்கதையைப் போலவும் சில காட்சிகளை உணர முடிகிறது.

இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை கான்சார் உலகிற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குநர்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.. அதை சமயம் ஆக்ஷன் காட்சிகளுக்கு முன்பாக ஒரு எமோஷனல் சீனையும் வைத்திருக்கிறார் டைரக்டர்.

இதைப் பார்க்கும்போது கேஜிஎப் படத்திலிருந்து டைரக்டர் பிரசாந்த் இன்னும் மீளவில்லை என்பது போலவே தெரிகிறது. பிரபாஸ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் பல ஆக்சன் அதிரடி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

பிரபாஸ் & பிரித்திவிராஜும் பேசிக்கொண்ட எதிரிகளை பந்தாடும் காட்சி வேற லெவல். அது போல கிளைமாக்ஸ் காட்சியில் வைத்திருக்கும் ட்விஸ்ட் அடுத்த பாகத்திற்கான அடித்தளம் என்பது தெரிகிறது.

இது முதல் பாகம் என்பதால் நிறைய காட்சிகளில் குழப்பம் இருக்கிறது. ஒருவேளை இரண்டாம் பாகத்திற்காக அப்படி காட்சிகளை அமைத்திருக்கிறாரோ என்னவோ?

முக்கியமாக ஸ்ருதிஹாசன் அவரது பின்னணி என்ன? பிரபாஸின் அம்மா ஈஸ்வரி ராவின் பின்னணி என்ன உள்ளிட்டவைகளுக்கு போதுமான விளக்கம் இல்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது.

வழக்கமாக வந்து செல்லும் ஹீரோயின் கேரக்டர் போல அல்லாது ஸ்ருதியின் கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கதை ஓட்டத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளது.

கே ஜி எஃப் படத்தைப் போல இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் காட்சிகள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிவிட்டது. ஈஸ்வரிராவின் அம்மா கேரக்டர் ரசிக்க வைக்கிறது அது போல ஜெகபதி பாபு கேரக்டரும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பாடல்கள் பெரிதாக கவனம் ஏற்கவில்லை. ஆனால் பின்னணி இசை மிரட்டல். முக்கியமாக ஹீரோயித்தை காட்டுவதற்காகவே பாடல்கள் பயன்படுத்தப்பட்டது போல தெரிகிறது.

படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் காட்ட வேண்டும் என நினைத்த இயக்குனர் ஒவ்வொரு காட்சியிலும் நூற்றுக்கணக்கான நடிகர்ககளை நடிக்க வைத்திருக்கிறார். எளிதான கதையை எடுத்து மிகப்பிரமாண்டமாக காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் பிரசாந்த் நீல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *