Latest:
திரை விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் மாமா சரவணன். இவரது தங்கை மகன் விதார்த்.

அரசு தரும் நிதி மூலம் கழிப்பறை கட்ட வீட்டின் பின்புறம் மண் தோண்ட அப்போது சோழர் கால ஆயிரம் பொற்காசுகள் கிடைகின்றன. இதை வீட்டின் உரிமையாளர்கள் அரசுக்கு தெரியாமல் சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர். பின்னர் பலருக்கு தெரிய, அனைவரும் பொற்காசில் பங்கு கேட்கிறார்கள்.

அதை அனுபவிக்க முடிந்ததா…? சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் என்பதுதான் படத்தின் கதை.

விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர், ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர்.

மாமா சரவணன் மாப்பிள்ளை விதார்த் ஆகியோர் சிறந்த நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளனர்.

சிகரெட் வாங்க வரும் நாயகனை பார்த்ததும் காதலியாக அருந்ததி நாயர்.

ஜார்ஜ் மரியான் மற்றும் ஹலோ கந்தசாமி வரும் சீன்கள் கலகலப்பூட்டுகிறது. இவர்கள் இருவரும் தான் படத்தை சுவாரசியமாக நடத்திச் செல்ல பெரும் பங்கு வகிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார்.

பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்ததோடு ஈரமான ரோஜாவே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கேயாரின் கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படம் வெளியாக உள்ளது.

வட இந்திய பிச்சைக்கார கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கபட்டு உள்ளது. திரைக்கதை ஓட்டத்திற்கு உதவாமல் படத்திற்கு மட்டுமே உதவி இருக்கிறது.

ஆங்காங்கே காமெடிகள் ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது. கடைசி 20 நிமிடங்களிலும் காமெடி ஒர்க்-அவுட் ஆகி இருக்கிறது.

ஒட்டு மொத்த ஊரையும் ஒரே ஸ்டேஷனுக்குள் அடைத்து பங்கு பிரிக்க திட்டங்கள் சிரிக்கும்படி உள்ளது.

ஆக இந்த ஆயிரம் பொற்காசுகள்.. கொடுத்த காசுக்கு தகுந்த படம் தான்..