குய்கோ விமர்சனம்- 3.75/5.; அம்மா பிள்ளை

குய்கோ இந்த வார்த்தை என்னவென்றால் குடியிருந்த கோயில் என்பதன் சுருக்கமே.
துபாயில் வேலை பார்க்கிறார் மலையப்பன் (யோகி பாபு) இவரின் அம்மா இறந்து விடவே அவர் இந்தியாவுக்கு வர ஓரிரு நாட்கள் ஆகிறது. எனவே அம்மாவின் சடலத்தை ஐஸ் பெட்டியில் வைக்க பைனான்சியர் முத்துக்குமாரை அணுகுகிறார் யோகி பாபுவின் உறவினர் இளவரசு.
உடன் முத்துக்குமார் செல்ல முடியாத காரணத்தினால் அவரது உறவினர் விதார்த்தத்தை துணைக்கு அனுப்புகிறார். அதன்படி இளவரசு விதார்த் இருவரும் ஐஸ் பெட்டியை எடுத்துக்கொண்டு அந்த கிராமத்திற்கு செல்கின்றனர்.
இரண்டு மூன்று நாட்கள் விதார்த் அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் யோகி பாபுவின் உறவினர் பள்ளி மாணவி ஸ்ரீ பிரியங்காவுக்கு கணக்கு சொல்லி கொடுக்கிறார் விதார்த் மற்றும் ஊர் மக்களோடு நட்புக் கொள்கிறார்.
யோகி பாபு வந்த பிறகு என் தாய் குடியிருந்த கோயில் தான் இந்த ஐஸ் பெட்டி. எனவே அதை விலைக்கு வாங்குகிறார். மேலும் ஊர் மக்களுக்கும் உதவி செய்கிறார்.
திடீரென ஒரு நாள் சடலம் வைக்கும் ஐஸ்பெட்டி காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே கதை.
சடலம் வைக்கும் ப்ரீசர் பாக்ஸ் (ஒரு ஐஸ் பெட்டியை) வைத்து இப்படி கூட கதை திரைக்கதை அமைக்க முடியுமா என தன்னுடைய முதல் படத்திலேயே வியக்க வைத்து விட்டார் பத்திரிக்கையாளரும் இயக்குநருமான அருள் செழியன்.
எங்கும் சினிமாத்தனம் இல்லாத வகையில் யதார்த்த மனிதர்களை வைத்து யதார்த்த வாழ்வியலை கொடுத்திருக்கிறார்.
யாரை யாரையெல்லாம் கலாய்க்க வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ அவற்றையெல்லாம் வசனங்களாக வைத்திருக்கிறார்.. முக்கியமாக 100 நாள் வேலை திட்டத்தில் ஒப்பாரி வைப்பது ஒரு நாள் வேலை எனவும் வச்சி செய்து இருக்கிறார்.
நாட்டில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் திருந்தாத ஒரு ஜென்மம் காவல்துறை என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்.
இளவரசு பேசும் நையாண்டி கலந்த அரசியல் டயலாக்குகள் நிச்சயம் உங்களை கைதட்டி ரசிக்க வைக்கும். நடிகர் வடிவேலு தமிழக அமைச்சர் சேகர்பாபு தமிழக போலீஸ் என அனைத்தையும் வச்சி செய்து இருக்கிறார். வடிவேலுக்கு என்னை கண்டாலே ஆகாது என யோகி பாபு பேசும் டயலாக்கும் உள்ளது.
நாயகி ஸ்ரீபிரியா கண்களால் நம்மை கவர்கிறார். அவருக்கு கொஞ்சமே காட்சிகள் என்றாலும் அவர் திரையில் வரும் சீன்கள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தான்.
எளிய மக்களின் நாயகன் விதார்த் என்னும் அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இது போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதற்காகவே அவரை பாராட்டலாம்.
யோகி பாபுவின் ஜோடியாக வரும் துர்காவும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இளம் வயதில் மெச்சூரிட்டியான நடிப்பு.
யோகி பாபு துர்காவும் பாடும் முத்துமாரி என்ற ஹிந்தி பாடல் நிச்சயம் நம்மை ரசிக்க வைக்கும்.
மாலை முரசு பேப்பர் காலையில் வரும்.. தினத்தந்தி மாலையில் வரும் என்ற சின்ன விஷயத்தை கூட ஒரு பாடலாக அமைத்து இருப்பது வேற லெவல் கற்பனை.
ஆனால் யோகி பாபுவின் கேரக்டர் சில காட்சிகள் கதையுடன் ஒட்ட மறுக்கிறது. முக்கியமாக அம்மா மீது பாசம் கொண்ட யோகி பாபு ஸ்டைலாக வருவது அதன் பின்னர் சகட்டுமேனிக்கு மற்றவர்களை திட்டுவது என்பதில் யதார்த்தம் இல்லை.
ஆக குய்கோ.. அம்மா பிள்ளை
