80ஸ் பில்டப் விமர்சனம் 3.5/5… காமெடி கலாட்டா

திரை விமர்சனம்

1980 களில் நடக்கும் கதை..
சந்தானம் தீவிரமான கமல் ரசிகர். அவரின் தாத்தா ஆர் சுந்தர்ராஜன் ரஜினி ரசிகர். தன்னை இளமையாக காட்டிக் கொள்ள ரஜினி ரசிகர் என்று சொல்லிக் கொள்வார் சுந்தரராஜன்.

ஒருநாள் கமல்ஹாசனின் படம் ரிலீஸ் ஆகும் நாளில் ஷாக் அடித்து மரணம் அடைந்து விடுகிறார் சுந்தர்ராஜன்.

அதற்கு சற்று நேரத்துக்கு முன்.. மன்சூர் அலிகான் மொட்ட ராஜேந்திரன் மனோபாலா மூவரும் கொண்டு வந்த வைரக் கற்களை கற்கண்டு என நினைத்து விழுங்கி விடுகிறார் சுந்தர்ராஜன்.

எனவே போஸ்ட்மாடம் செய்யும் ஆனந்தராஜை வைத்து அந்த வைரக் கற்களை எடுக்க உள்ளே நுழைகின்றனர். மஞ்சக்கிளி என்ற பெண் வேடமிட்டு ஆனந்தராஜ் நுழைகிறார்.

இது ஒரு புறம் இருக்க சந்தானத்திற்கும் அவரது தங்கை சங்கீதாவுக்கு ஒரு சவால்.

தாத்தாவின் பிணத்தை எடுப்பதற்குள் நாயகி ராதிகா ப்ரீத்தியை காதலிக்க செய்வது.. அதாவது ராதிகாவே வந்து சந்தானத்திடம் காதலை சொல்ல வேண்டும் என சவால் விடுகிறார் தங்கை சங்கீதா.

அந்த ஒரு நாளுக்குள் நடக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான் இந்த 80ஸ் பில்டப்… அதன் பிறகு என்ன நடந்தது ராதிகாவை இம்ப்ரஸ் செய்தாரா சந்தானம்? சந்தானத்திடம் தன் காதலை சொன்னாரா ராதிகா பிரித்தி? என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள் சந்தானம் ராதிகா பிரித்தி ஆனந்தராஜ் மன்சூர் அலிகான் மொட்ட ராஜேந்திரன் மனோபாலா மயில்சாமி ஆடுகளம் நரேன் சங்கீதா ஆர் சுந்தர்ராஜன் கலைராணி கூல் சுரேஷ் என கோலிவுட் காமெடி நட்சத்திரங்கள் அனைவரும் இதில் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் அதை உணர்ந்து காமெடியில் படத்தை பில்டப் கொடுத்து தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்.

முக்கியமாக பல படங்களில் சந்தானம் தாடி வைத்து நடித்திருப்பார்.்இது 1980 காலகட்டத்தில் உள்ள கமல்ஹாசன் நினைவுபடுத்தும் போல மீசை ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் வடிவமைத்து இருக்கிறார். முக்கியமாக கமல் பாணியை பின்பற்றி ஒரே ஒரு காட்சியில் முரட்டுக்காளை ரஜினி ஆகவும் வந்து ரஜினி ஸ்டைல் காட்டி இருக்கிறார்.

ராதிகா & சங்கீதா இருவரும் கொள்ளை அழகு.. நடிப்பிலும் நம் மனதை கொள்ளையடிக்கின்றனர்.

மஞ்சக்கிளி ஆனந்த்ராஜ் வேற லெவல் காமெடி.. இவருக்கு ஆடுகளம் நரேனுடன் செம கெமிஸ்ட்ரி.

எமதர்ம கூட்டமாக கே.எஸ்.ரவிக்குமார, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரும் கலகலப்பூட்டி உள்ளனர்.

படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் 1980 காலகட்டத்திற்கு நம்மை எடுத்து செல்கிறது. முக்கியமாக ஒய்யாரி ஒயார் என்ற பாடல் காதலர்களையும் இளைஞர்களை கவரும் என்ற அடித்து சொல்லலாம்.

படத்தின் ஒளிப்பதிவு கலைவண்ணம் படத்தொகுப்பு அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. எங்கும் இன்றைய காலகட்டங்களை காட்டாமல் எண்பதுகளின் காலகட்டத்தை காட்டுவதற்காக அன்று பயன்படுத்திய ஜக்கு முதல் பாத்திரங்கள் சமையலறை வரை என அனைத்தையும் கலை இயக்குனர் அற்புதமாக வடிவமைத்துள்ளார .

இதற்கு முன்பு குலேபகவாலி ஷூ ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் எந்த லாஜிக்கும் நீங்கள் பார்க்கக் கூடாது என்ற சந்தானம் ஏற்கனவே சொல்லிவிட்டதால் லாஜிக்கை மறந்து காமெடி மேஜிக்கை இந்த படத்தில் காணலாம்.

ஆக.. இந்த 80ஸ் பில்டப்… காமெடி கலாட்டா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *