அம்பு நாடு ஒம்பது குப்பம் பட விமர்சனம்.. தீராத ஜாதீ

பி.கே. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’.
இதில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மூலக்கதை – துரை குணா.
இயக்கம் – ஜி.ராஜாஜி,
ஒளிப்பதிவு – ஓ.மகேஷ்,
இசை – அந்தோணி தாசன் –
பின்னணி இசை – ஜேம்ஸ் வசந்தன்,
படத் தொகுப்பு – பன்னீர்செல்வம்,
நடன இயக்கம் – ராதிகா,
பாடகர்கள் – பிரதீப்குமார் அந்தோணிதாசன்,
‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை எழுத்தாளர் துரை குணா, இயக்குநர் ஜி.ராஜாஜி, தயாரிப்பாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
இப்படம் நேற்று நவம்பர் 17ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. சமீப காலமாக தமிழ் சினிமாவில் சாதி மோதல்கள் குறித்த நிறைய படங்கள் வெளி வருகின்றன. அந்த வகையில் இந்த படமும் சேர்ந்துள்ளது.
தான் படிக்காவிட்டாலும் தன் குழந்தைகள் படிக்க வேண்டும்.. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரின் கண்ணீர் கதையை இந்த படமும் சொல்லியுள்ளது.
ஆனால் இன்றும் இந்த டிக் டாக் உலகத்தில் சாதி மோதலும் தீண்டாமையும் எத்தனை வன்முறைகளை நிகழ்த்தும் என கணக்கில்லாமல் செல்வதையும் இந்த படம் சுட்டிக் காட்டியுள்ளது.
நாயகனின் தந்தையாக நடித்துள்ள சன்னாசி அவரது நடிப்பும் நிச்சயம் ஒவ்வொருவர் கண்களையும் குளமாக்கும். அவரது நடிப்பு உங்களை கைகள் தட்ட வைக்கும்.
கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ஒரு முடிவை கொடுத்து எந்த சினிமாத்தனமும் இல்லாமல் திரைக்கதையை முடித்து இருப்பது ராஜாஜியின் ராஜதந்திரம் எனலாம்.
டீக்கடையில் மேல் சாதிக்கு ஒரு கிளாஸ் கீழ் சாதிக்கு ஒரு கிளாஸ் எனது வேறுபடுத்தி காட்டி இருப்பதும்.. கோயில்களில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் இருந்தாலும் ஒவ்வொரு சாதிக்கும் பூசாரி வேறுபட்டு பிரசாதம் கொடுப்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.
இசை அந்தோணி தாசன் பின்னணி இசை ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் இருந்தும் பாடல்கள் பின்னணி இசை ரசிக்கும் படியாக இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமே.. ஆனால் ‘எங்க தலைமுறை இதுக்கு மேல போதும்… உங்க தலைமுறை 100 காலம் வாழும்..’ என்ற பாடல் வரிகள் நம்மை ரசிக்க வைக்கிறது
ஆக அம்பு நாடு ஒம்பது குப்பம்.. தீராத ஜாதீ
