Latest:
திரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை பட விமர்சனம்..

 

1990-களில் நடக்கும் கதை இது தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் ஜமீன்தார் மற்றும் அவரது மனைவி ஊர் மக்கள் வசிக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு மர்ம நபர் பொது சுவற்றில் ளதோ இருவருக்கு கள்ளக்காதல் என்று எழுதி வைக்கின்றார். அதே நேரத்தில் அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்கள்.

அதற்கு அடுத்த வார செவ்வாய்க்கிழமை இதே போன்ற ஒரு சம்பவம் நடக்கிறது.

செவ்வாய்க்கிழமை குறி வைத்து இது நடப்பதால் சுவற்றில் எழுதும் மர்ம நபர் யார் அவரின் நோக்கம் என்ன கள்ளக்காதல் என்ற பெயரில் அவர்கள் கொல்லப்படுவது ஏன்? என்பதற்காக அடுத்த செவ்வாய்க்கிழமைக்காக ஊர் மக்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் நந்திதா ஸ்வேதா. அவர் விசாரணையில் கண்டுபிடித்தார்? செவ்வாய்க்கிழமை குறி வைத்து நடப்பது ஏன்? செவ்வாய்க்கிழமைக்கும் கொலைக்கும் என்ன தொடர்பு என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக பாயல் ராஜ்புட். மார்கழிக்கு ஏற்றது போல் இளைஞர்களை சூடேற்றும் கவர்ச்சி ஒரு பக்கம்.. எல்லா மாதத்திற்கும் ஏற்ற சிறந்த நடிப்பு ஒரு பக்கம் என இரண்டையும் கொடுத்து நம்மை மகிழ்விக்கிறார் நடிகை பாயல் ராஜ்புட்.

இது போன்ற வேடத்தை எந்த நாயகியும் ஏற்பது கடினம்.. தன் ஆசைக்கு ஏற்ப எல்லோருடனும் படுக்கையை பகிர்வது. ஆனால் அதற்கு ஒரு வித்தியாசமான காரணம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

நாயகியின் காதலன் நம்மை நடிப்பில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் ஆக்ஷனிலும் அடி தூள் கிளப்பி இருக்கிறார்.

காதலிக்காக தன் தந்தையை இவர் கொன்றாலும் அதற்கும் ஒரு நல்ல காரணத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பொதுவாக ஜமீன்தார் என்றாலே ஆன்மீகவாதியாக சினிமாவில் காட்டப் படுவார்கள். ஆனால் இவர் ஒரு நாத்திகனாக காட்டப்படுவது வித்தியாசமான கற்பனை.

அதே சமயம் ஜமீன்தாரின் மனைவி ஆன்மீகவாதியாக காட்டப்பட்டு கடைசியில் காம பெண்ணாக காட்டியிருப்பது எதிர்பாராத திருப்பம்.

ஆசிரியராக வரும் அஜ்மல் அமீர் கொஞ்ச நேரம் என்றாலும் வித்தியாசமான வேடம். பெண்களை தன் ஆசை வலையில் விழ வைத்து கழட்டிவிடும் வித்தியாசமான வேடம் இருக்கிறார் அஜ்மல். அதே சமயம் வில்லத்தனம் கலந்த ஒரு ஹீரோவாக பளிச்சிடுகிறார்.

இவர்களுடன் சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஸ், லக்ஷ்மன் உள்ளிட்டோ ரூம் தங்கள் வேடங்களில் கச்சிதம்.. மிகை இல்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்.

காந்தாரா படத்திற்கு இசையமைத்தவர் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். ஒரு திரில்லர் பாணியில் கதையை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவும் மேக்கிங் வேற லெவல் என்றே சொல்லலாம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீளம் இருந்தாலும் கொலைக்கான காரணம் குற்றவாளிகள் யார் என்பதை எல்லாம் சொல்லி இருப்பதால் ரசிக்க முடிகிறது.

இந்த படம் வெள்ளிக்கிழமை வந்தாலும் செவ்வாய்க்கிழமை நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடித்த கிழமையாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கள்ள கள்ளக்காதலை மட்டுமே மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஊரங்கிலும் மாவட்ட வாரியாக கள்ளக்காதல் நடைபெறுவதை காட்டி இருக்கிறார்.. இது போன்ற சம்பவங்களை நாம் நாளிதழல்களில் படித்தாலும் கள்ளக்காதலை மட்டுமே குறிவைத்து இயக்குனர் செவ்வாய்க்கிழமையை சொல்லி இருப்பது ஏன்?

அதிலும் செவ்வாய்க்கிழமை கடவுளுக்கு உகந்த தினமாகும் காட்டி இருப்பதும் ஏன் என்று புரியவில்லை?

ஆக வெள்ளிக்கிழமையில் வந்த செவ்வாய்க்கிழமை திரில்லர் இது.