சைத்ரா பட விமர்சனம்..
ஜெனித்குமார் இயக்கத்தில் மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’.
நவம்பர் 17- ம் தேதி ‘சைத்ரா’ வெளியாகிறது. பிவிஆர் பிக்சர்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
டிடெக்டிவ் ஏஜென்ட் திவ்யா தன் அண்ணன் போலீஸ் உதவியுடன் தன் நண்பன் இருக்கும் இடத்தை தேடி அலைகிறார். அப்போது ஒரு சாமியாரை சந்தித்து நண்பனை அறிய வேண்டி இடத்தை கேட்கிறார். வெற்றிலையில் மை போட்டு அவர் சொல்லவே வடக்கு வீதியில் உள்ள பெரிய பங்களா சைத்ரா வீட்டிற்கு வருகிறார்
அப்போது பூஜா மற்றும் அவரது கணவரும் நாயகி சைத்ரா (யாஷிகா ஆனந்த்) தேடி அவரது வீட்டிற்கு வருகின்றனர்.
ஆனால் சைத்ராவின் பங்களாவின் கதவு பூட்டப்பட்டுள்ள நிலையில் கதவை திறக்க முயற்சி நடக்கிறது. தன்னுடைய நண்பனை தேடி வரும் திவ்யா நீங்கள் இருவரும் யார் உங்களுக்கும் சைத்ராவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார் ?
சைத்ரா எங்கள் தோழி.. அவரை நாங்கள் காண வந்தோம்.. இடையில் எங்கள் பைக் விபத்து ஆகிவிட்டது.. எனவே வர தாமதமாகிவிட்டது என்கிறார்.
பின்னர் ஒரு வழியாக கதவை திறந்து உள்ளே சென்றால் அங்கே தன் நண்பன் கொல்லப்பட்டு கையில் கத்தியுடன் இறக்கும் தருவாயில் கிடக்கிறார்.
இந்த கொலையை பார்த்த பூஜாவும் அவர் கணவரும் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். இந்த நிலையில் திவ்யா தன் அண்ணன் உதவியுடன் தன் நண்பனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்.
அங்கே சென்ற பின் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.. காரணம் சைத்ராவை காண வந்த பூஜா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது என்ற நாளிதழ் செய்தியை பார்க்கிறார்.
அப்படி என்றால் அவர்கள் பேயாக வந்தார்கள்? அவர்கள் யார் ? சைத்ராவுக்கு அவர்களுக்கும் என்ன தொடர்பு? நண்பனை கத்தியால் குத்தியது யார் ? என்ற கேள்விகளே படத்தின் மீதிக்கதை.
இதில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடிக்க அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு கதையை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்றால் கதை மட்டும் அவசியம் அல்ல.. நடிகர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானது. ஆனால் இந்த படத்தில் ஏதோ நாம் ரேடியோவில் கேட்கும் ஒலி சித்திரம் போல மைண்ட் வாய்ஸ் கூட வெளியே கேட்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக கத்தியை எடுத்து வா என்று ஒருவர் சொன்னால்.. நான் கத்தி எடுக்க போகிறேன்.. கத்தியை எடுத்து வருகிறேன் என்ற டயலாக்குகள் நாடகத் தனமாக உள்ளது. முழுக்க முழுக்க இது போன்ற டயலாக்குகள் இருப்பதால் ஒரு சினிமா பார்க்கும் உணர்வே இல்லாமல் போய்விட்டது.
மேலும் படத்தில் யாஷிகாவும் ஒரு பேய் தோழியும் பேய் என்ற நிலையில் திரைக்கதை அமைத்து விதத்தில் ஜெனித் குமார் நம் பொறுமையை சோதித்து விட்டார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இறுதியாக நான் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்று யாஷிகா கூறுகிறார். இதெல்லாம் தேவையா? ஜெனித் குமார்.
டிடெக்டிவ் திவ்யா ஆக வரும் சக்தி அழகில் நம்மை கவர்கிறார்.. அவரது மேனியும் நம்மை சுண்டி இருக்கிறது..
யாஷிகா அவரது கணவன் அவரது நண்பர் தோழி அவரது கணவர் திவ்யா இரண்டு போலீஸ் இரண்டு சாமியார்கள் என படத்தை முடித்து விட்டார் ஜெனித் குமார்.
பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் மொத்தம் பத்து நடிகர்கள் இருக்கிறார்கள்.. அவர்களை சுற்றியே கதையை அமைத்திருப்பது ஒரு விதத்தில் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்த அளவிற்கு பின்னணி இசை இல்லை என்பது வருத்தமே.. படம் திருநெல்வேலியில் நடப்பதால் மலையாளம் கலந்த தமிழை வசனங்களில் கேட்க முடிகிறது..
ஆக இந்த சைத்ரா.. பயமில்லாத பேய்