திரை விமர்சனம்

தி மார்வெல்ஸ்.. திரைப்பட விமர்சனம்

‘தி மார்வெல்ஸ் (2023)’ என்பது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளிவரவிருக்கும் 33வது சூப்பர் ஹீரோ படம்.

தி மார்வெல்ஸ்’ திரைப்படத்தில் ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய 3 பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் உள்ளன.

நியா டகோஸ்டா இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே அஸ்டன், இமான் வெல்லானி, சியோ-ஜுன் பார்க் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள், பெரும் அழிவுசக்திகளை உருவாக்கி வில்லனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விண்மீன் திரள் (Galaxy)-ஐக் காக்க ஒன்றிணைக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘தி மார்வெல்ஸ்’ வெளியாகிறது.

‘தி மார்வெல்ஸ்’ படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும்.

ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அவ்த சாகச படத்தின் மூலம், MCU இன் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

கேப்டன் மார்வெலின் சக்தியைக் கண்ட பிறகே நிக் ப்யூரிக்கு அவெஞ்சர்ஸ் அணியை உருவாக்கும் உத்வேகம் பிறந்தது.

கெரோல் போன்ற சூப்பர் ஹீரோக்களைக் கண்டுபிடித்து, உலகைக் கண்காணிக்கும் பொறுப்பினை அவெஞ்சர்ஸ்க்கு வழங்கத் தூண்டியது. ‘தி மார்வெல்ஸ்’ படத்தில், கொடுங்கோல் க்ரீக்களிடம் இருந்து தனது அடையாளத்தை மீட்டெடுத்து, உச்ச உளவுத்துறையைப் பழிவாங்குகிறார்.

ஆனால், எதிர்பாராத விளைவுகளால் நிலைகுலையின் பிரபஞ்சத்தின் சமநிலையைக் காக்கும் பொறுப்பு கேப்டன் மார்வெலுக்கு ஏற்படுகிறது. அவரது கடமைகள் அவரை ஒரு க்ரீ புரட்சியாளருடன் இணைக்கப்பட்ட ஓர் இயல்பிற்கு முரணானதொரு புழுத்துளைக்குள் (Wormhole) அனுப்பும்போது, அவரது சக்திகள் ஜெர்சி நகரத்தின் சூப்பர் ரசிகையான கமலா கான் எனும் மிஸ். மார்வெலிடமும், கெரோலை விட்டுப் பிரிந்த மருமகள் கேப்டன் மோனிகா ரேம்போவிடமும் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த சாத்தியமில்லாத மூவர் கூட்டணி ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் வேலையில் தங்களை ‘தி மார்வெல்ஸ்’ ஆகப் பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதில், கெரோல் டான்வெர்ஸ் எனும் கேப்டன் மார்வெலாக ப்ரீ லார்சனும், ஃபோட்டான் எனும் மோனிகா ராம்போவாக டியோனா பாரிஸும், கமலா கான் எனும் மிஸ் மார்வெலாக இமான் வெல்லானியும் நடித்துள்ளனர்.

மூன்று நாயகிகள் 2வது மோகினா ராம்ப்யூவாக வரும் டெயோனா பாரீஸ். கேப்டன் மார்வெலுக்கும் இவருக்கான காட்சிகள் சிறப்பு.

குட்டி சூப்பர் ஹீரோ கமாலா கான் தான்.

ஸ்பைடர்மேன் போல வேடிக்கை செய்கிறார் கமாலா கானாக வரும் வெல்லானி.. கமாலா கானுக்கும், பிரை லார்சனுக்குமான சீன்களில் கெமிஸ்டிரி ஒர்க்அவுட் சூப்பர்.

அதே சமயம் கமலா கானின் குடும்பத்தைக் ஸ்பேஸில் உலவ விட்டது ரொம்ப ஓவர்.

நம்ம டீமுக்கு ஒரு பெயர் வைக்கணும்; போன்ற காட்சிகள் சிரிப்பு ரகம்.
பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் சில காட்சிகள் மெதுவாகவும் சில காட்சிகள் அதிரடியாகவும் இருக்கும்.. இதில் இரண்டு அதிரடி காட்சிகளுக்கு நடுவே வரும் சீன்கள் நம் பொறுமையை சோதிக்கின்றன.. அந்த நீளத்தை எடிட்டர் குறைத்து இருக்கலாம்.

க்ரீ மக்களின் போராளி டார் பென் (ஜா ஆஷ்டன்) சோதிக்கும் ரகமே.. ஸ்கிரல் உலகம் , க்ரீ உலகம் ஆகிய காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே..

CREDITS

கதாபாத்திரங்கள் – Samuel L. Jackson, Mohan Kapur, Saagar Shaikh
இயக்கம் – Nia Da Costa
ஒளிப்பதிவு – Sean Bobbitt
இசை – Laura Karpman

இப்படம், கேப்டன் மார்வெல், மோனிகா ரேம்போ, மிஸ் மார்வெல் முதலிய மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.