சினிமா செய்திகள்

ஸ்ட்ரைக்கர் – விமர்சனம்

சிறு முதலீட்டில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் அதன் கதை கரு மற்றும் திரை மொழிகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி பாராட்டை பெறும். அந்த வரிசையில் அறிமுக நடிகர் ஜஸ்டின் விஜய் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் ‘ஸ்ட்ரைக்கர்’ வெகுஜன மக்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.

கதையின் நாயகனான ஜஸ்டின் விஜய் கார் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். அவர் ஒரு காருக்கு முழுமையாக பழுது பார்க்காத நிலையில் ..தன் உடன் பணியாற்றும் தொழிலாளர், தவறுதலாக அந்த வாகனத்தை அதன் உரிமையாளரை எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார். பிரேக்கை சரி செய்யாத வாகனத்தை எடுத்துச் சென்ற அதன் உரிமையாளர் ஓரிடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இதனை சற்று தாமதமாக தெரிந்து கொண்ட நாயகன் தனது நண்பனுடன் விரைந்து சென்று அவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் விபத்து நடந்து விடுகிறது. அதில் அவரும் இறந்து விடுகிறார்.

இதனால் மன புழுக்கத்தில் இருக்கும் கதையின் நாயகனான ஜஸ்டின் விஜய், தன் இயல்பான விருப்பமான ஆவிகளுடன் பேசுவதை தீவிரப் படுத்துகிறார். அதற்காக சென்னையில் பிரத்யேகமாக இயங்கும் கல்லூரியில் சேர்ந்து பயிற்சியும் பெறுகிறார். மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு அவர் தன்னுடைய கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஆவிகளுடன் பேச ஓஜா போர்ட் எனப்படும் பிரத்தியேக கருலியுடன் சென்னையின் புறநகர் பகுதிக்கு செல்கிறார். அவருடன் அவருடைய தோழி வித்யா பிரதீப்பும் உடன் செல்கிறார்.

அங்கு ஓஜா போர்டு உதவியுடன் தான் கற்றுக் கொண்ட படி ஆவிகளுடன் பேச தொடங்குகிறார். அந்த ஆவி, அவருடன் வந்த வித்யா பிரதீப் உடலுக்குள் சென்று ஜஸ்டின் விஜயை எச்சரிக்கிறது. இருந்தாலும் ஜஸ்டின் விஜய் தொடர்ந்து அந்த ஆவியுடன் பேசுவதில் தீவிரம் காட்டுகிறார். அதன் பிறகு நடந்தது என்ன? என்பதனை விளக்குவது தான் இப்படத்தின் உச்சகட்ட காட்சி மற்றும் மீதி திரைக்கதை.

அறிமுக நடிகரான ஜஸ்டின் விஜய்- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை போல் தன்னுடைய தோற்றத்திற்கு ஏற்ற திரில்லர் கதையை தெரிவு செய்து அதில் ஷட்டிலான பர்பாமென்ஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்கிறார்.

இவருக்கு ஜோடியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் வித்யா பிரதீப் தன் அனுபவிக்க நடிப்பால் அவர் பயந்து, ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

ஆவியை வரவழைத்து ஆவியுடன் பேசும் காட்சிகளில் இயக்குநர் எஸ் ஏ பிரபுவும், ஒளிப்பதிவாளர் மனிஷ் மூர்த்தியும், இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், ரசிகர்களை பதற்றம் அடைய வைக்கிறது.

ஓஜா போர்டு என்ற பிரத்தியேக கருவியுடன் ஆவியுடன் பேச முடியும் என்ற ஒரு விசயத்தை பார்வையாளர்களுக்கு புதிதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை தாராளமாக பாராட்டலாம்.

நடிகை கஸ்தூரி சங்கர் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

குறைகள் இல்லாமல் இல்லை. ஆவிகளுடன் பேச இயலும் என்ற ஒரே ஒரு அம்சத்தை மட்டும் முதன்மைப்படுத்தி இருப்பதால்..முழு நீள திரில்லர் படைப்பாக வரவேண்டிய படத்தை…இதன் திரைக்கதையை கச்சிதமாக செதுக்கியிருந்தால் பார்வையாளர்களுக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும். இருப்பினும் ஸ்ட்ரைக்கர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

ஸ்ட்ரைக்கர் – லைக்கர்