ஓடிடியில் கலக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
2023 ஜூன் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொண்ட இவ்வகை திரைப்படங்கள், குறிப்பாக குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரியளவில் மதிப்பைப் பெற்று வருகின்றன.
முன்னதாக திரையரங்குகளில் வெளியான பின்பும், அகிலன், காஃபி வித் காதல் மற்றும் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களுக்கும், அதிகமான பார்வை எண்ணிக்கைகளைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
தற்போது ZEE5 தளத்தில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், தமிழரசன் ஆகிய படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து மேலும் பார்வை நிமிடங்களைக் குவித்து சாதனை படைத்து வருகிறது. திரையரங்கில் வெளியான பின்பும் கூட, இந்தப் படங்களை ஓடிடியில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடி.க்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. அதிலும் ZEE5 தளம் தமிழில் அதிக வெற்றிகரமான படைப்புகளுடன் முன்னணியில் இருந்து வருவது சிறப்பு.
