சினிமா செய்திகள்

ஜவான் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான் ஜவானின் முதல் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..

ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார்.

#AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில வேடிக்கையான அரட்டைப் பேச்சுகளுக்குப் பிறகு, படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ஷாருக்கான் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஷாருக்கான் தனது #AskSRK அமர்வுகளில் இதற்கு முன் இதை செய்ததில்லை என்பதால், அவரது இந்த செயல் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.

ஷாருக்கான் ஜவானின் புதிய கூல் போஸ்டரை வெளியிட்டார். அதில் அவரது தீவிரமான ‘வழுக்கை’ தோற்றத்தை காட்டினார். இது ஜவான் ப்ரிவியூக்கு பிறகு மிகவும் பிரபலமானது. இந்த போஸ்டர் ஏற்கனவே படத்திற்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் ஷாருக் கானின் #AskSRK அமர்வு, சூப்பர் ஸ்டாருடன் உரையாடுவதற்கும், அவரது நகைச்சுவையான மற்றும் புத்திசாலித்தனமான பதில்களை காண்பதற்கும் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய ஒரு வாய்ப்பாகும். ஜவான் ப்ரிவியூவின் உற்சாகமான வெளியீட்டைத் தொடர்ந்து #AskSRKவில் ஷாருக்கானின் தோற்றத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதிக தாமதமின்றி சூப்பர் ஸ்டார் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் தன்னுடைய பிரத்யேக பாணியில் உரையாடலை நடத்தினார்.

மேலும் ஜவானின் அதிரடியான பிரிவியூவில் ஷாருக்கானின் பல்வேறு தோற்றங்கள் இதுவரையில்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்தின் பிரிவியூ 24 மணி நேரத்தில் 112 மில்லியன் பார்வைகளை அனைத்து தளங்களிலும் பெற்று இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய சாதனையை படைத்திருக்கிறது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லி இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.