இன்பினிட்டி பட விமர்சனம்
சென்னையில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியும் கொல்லப்படுகிறார். இதனால், அந்த வழக்கு சிபிஐ வசம் போகிறது. சிபிஐ அதிகாரி நட்டி கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது, ஏற்கனவே நடந்த ஒரு பெண்ணின் கொலைக்கும், இந்த வழக்குக்கும் உள்ள தொடர்பை கண்டு பிடிக்கிறார். அது என்ன? கொலையாளி யார்? என்பது கிளைமாக்ஸ்.
நாயகனான நட்டி சிபிஐ அதிகாரி கேரக்டரில் மிடுக்கு காட்டுகிறார். சென்னையில் அடுத்தடுத்து நடந்த மூன்று கொலைகளை அவர் விசாரிக்கத் தொடங்கும்போதே ஒருவித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
ஆரம்பத்தில் அப்பாவி தோற்றத்தில் வந்து வில்லியாக மாறும் வித்யா பிரதீப் நடிப்பில் இன்னும் மிரட்டியிருக்கலாம். போலீஸ்காரராக வரும் முனீஷ்காந்த் காமெடிக் காட்சிகளில் சரவெடியாக வெடிக்கிறார்.
பாலசுப்பிரமணியம் இசை ஓ.கே. ரகம். சாய்கார்த்திக் இயக்கி இருக்கிறார். படத்தின் சஸ்பென்ஸ், திரைக்கதை முடிச்சில் கதை சிக்கிக்கொண்டு தடுமாறுவதை கவனித்திருக்கலாம். மூன்று கொலைகளை செய்ததும் நட்டியிடம் வந்து தானாக வந்து சரணடைகிறார் வில்லன். ஆனால், மூன்று கொலைகளை செய்து முடித்த போது நட்டியையே கொல்ல வருகிறார். இது என்ன மாதிரியான லாஜிக் என்பதை இயக்குனர் விளக்கி இருக்கலாம்
முதல் பாகத்தில் விட்டதை இரண்டாம் பாகத்திலாவது பிடிக்க இயக்குனர் முயற்சிக்கட்டும்