பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார் 1 : சீஸ் ஃபயர்’ படத்தின் டீசர் வெளியீடு
நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட்சிகளை இந்த டீசர் வழங்குகிறது. முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி வாய்ந்த உரையாடல்களால் நிறைந்திருக்கும் இந்த டீசர், அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது.
மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘கே ஜி எஃப்’ படத்திற்குப். பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு. எதிர்காலத்தில் பல அத்தியாயங்களை வழங்கி.. தனக்கென புதிய பாரம்பரியத்தையும்… புதிய உலகத்தையும் உருவாக்கியுள்ளார். இயக்குநர். முன்னணி நட்சத்திர நடிகர்களுடன்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டீசரில் கண்ணைக் கவரும் காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. அதே தருணத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் முன்னோட்டத்திற்காக மட்டுமே முக்கிய உள்ளடக்கங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இவை யாவும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இருப்பினும் இங்கே கவனிக்க வேண்டிய சுவாரசியமான உண்மை, இந்த டீசர் சலார் எனும் பிரபஞ்சத்திலிருந்து சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் என பெயரிடப்பட்ட பகுதி மட்டுமே.
மேலும் சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் என்பது… பிரபல இயக்குநர் பிரசாத் நீல் மற்றும் சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஆகியோரின் கனவு கூட்டணியை முதன்முறையாக ஒன்றிணைக்கும் இந்திய அளவிலான திரைப்படமாகும். இந்த திரைப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற கே ஜி எஃப் அத்தியாயங்களின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளரான விஜய் கிரகந்தூரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘கே ஜி எஃப்’ படத்தின் இரண்டு அத்தியாயங்களிலும் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் இப்படத்திலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.
படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.