போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் கதை.
ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் ஒரு பள்ளி குழந்தையை கடத்தும் போது, அதை மஹத் நேரில் பார்த்து அருகில் உள்ள மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அமித் பார்கவ்விடம் தெரிவிக்கிறார். சம்பவ இடத்துக்குச் செல்லும்போது தான் அந்த கும்பலும் ஆய்வாளரும் கூட்டாளிகள் எனத் தெரிய வர…
விபரீதம் உணர்ந்து தப்பி ஓடும் மஹத் அந்த கும்பலால் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்ட மகத்தின் காதலியும் காவல் துறை உதவிஆய்வாளருமான வரலட்சுமியும், அவரது 3 நண்பர்களும் சேர்ந்து காவல் ஆய்வாளரையும் மாஃபியா கும்பல் தலைவனையும் காவல் நிலையத்திலேயே வைத்து கொல்லத் திட்டமிடுகிறார்கள். ஆனால், அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. அதெப்படி? என்பது சுவாரசிய சஸ்பென்ஸ்.
காவல் நிலையத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கை உயர் காவல்துறை அதிகாரி ஆரவ் விசாரிக்கிறார். அவரது விசாரணையில் குற்றவாளி சிக்கினாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.
கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதிலும், அவர்களைக் கொல்வதற்கு திட்டம் போட்டுத் தருவதிலும், படத்தின் பிரதான பாத்திரமாக கம்பீர உலா வருகிறார், வரலட்சுமி. இந்த கூட்டணியில் நடிப்பில் இவருக்கு அடுத்த இடத்தில் சந்தோஷ் பிரதாப் இருக்கிறார். வில்லன்களாக வரும் மாஃபியா கும்பல் தலைவர் சுப்ரமணிய சிவா, காவல் துறை ஆய்வாளராக வரும் அமித் பார்கவ் விசேஷமாய் ஈர்க்கிறார்கள்.
கதையின் பாதியில் உயர் அதிகாரியாக அறிமுகமாகும் ஆரவ் விசாரணை செய்யும் காட்சிகளில் கம்பீரமான உடல்மொழி தனி நடிப்பை வழங்கி விடுகிறது.
இரண்டு போலீஸ் ஸ்டேஷன், மூன்று வீடுகள் இதைச் சுற்றியே காட்சிகள் நகர்ந்தாலும் அதற்குள் என்ன வித்தை செய்து பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைக்க முடியுமோ அதை சரியாக செய்திருக்கிறது சேகர் சந்துருவின் ஒளிப்பதிவு. மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை கதை நகர்த்தலில் பெரும்பங்கை எடுத்துக் கொள்கிறது.
‘கொன்றால் பாவம்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது தமிழ் படத்தையும் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இயக்கி ஜெயித்திருக்கிறார், இயக்குனர் தயாள் பத்மநாபன். எளிமையான கருவை வைத்துக் கொண்டு க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்த இயக்குநர் தயாள் பத்மநாபன், கன்னட சினிமா மாதிரி இனி தமிழிலும் நிலை கொள்வார் என்பதை உறுதி செய்கிறது படம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/Untitled-3.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/05/Untitled-3-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் கதை. ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் ஒரு பள்ளி குழந்தையை கடத்தும் போது, அதை மஹத் நேரில் பார்த்து அருகில் உள்ள மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அமித் பார்கவ்விடம் தெரிவிக்கிறார். சம்பவ இடத்துக்குச் செல்லும்போது தான் அந்த கும்பலும் ஆய்வாளரும் கூட்டாளிகள் எனத் தெரிய வர... விபரீதம் உணர்ந்து தப்பி ஓடும் மஹத் அந்த கும்பலால் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்ட மகத்தின் காதலியும்...