ஃபர்ஹானா திரைப்பத்தில் முஸ்லிம் சமூகம் வேதனைப்படும் காட்சிகளோ , வசனங்களோ இல்லை…!- அச.உமர் பாரூக் மாநிலப் பொதுச் செயளாலர் SDPI கட்சி

ஃபர்ஹானா திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக
சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில் , அப்படத்தை காண பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நானும்,மாநிலச்செயலாளர், A.K.கறீம் ,
செயற்குழு உறுப்பினர்,முகம்மது ரஷீத்,
தென்சென்னை மாவட்டத்தலைவர்,
முகம்மது சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள்
பார்த்தோம் .
படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை .
எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன் .
ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு , இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார் .
அதில் சில படிப்பினைகளும் உள்ளன .
மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ஃபர்ஹானா பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
………………………………..
அச.உமர் பாரூக்
மாநிலப் பொதுச் செயளாலர்
SDPI கட்சி
தமிழ்நாடு .
