சினிமா செய்திகள்திரை விமர்சனம்

டி.எஸ்.பி. பட விமர்சனம்

விஜய் சேதுபதிக்கும், திண்டுக்கல் ரவுடியான வில்லன் பிரபாகருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. விஜய் சேதுபதியை கொலை செய்ய பிரபாகர் முடிவு செய்ய, திண்டுக்கல்லில் இருந்து வெளியேறும் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாகி பிரபாகரனின் ரவுடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் திண்டுக்கல் வர…அதற்குள் நம்ம ரவுடி பிரபாகர்அரசியல் புகுந்து எம்.எல்.ஏ.ஆகி விடுகிறார். எம்.எல்.எ.வை எதிர்த்து போலீஸ் அதிகாரி ஆடும் ரணகள ஆட்டமே இந்த டிஎஸ்.பி.

டிஎஸ்.பி.யாக விஜய்சேதுபதி அதிரடி காட்டுகிறார். சேதுபதி படத்தில் வந்த சீரியஸ் போலீஸாக இல்லாமல் முழுக்க காமெடி, ரொமான்ஸ் கலந்த கமர்ஷியல் பாத்திரத்தில் நிறைந்து நிற்கிறார். நண்பர்களை அடிக்கும் ரவுடி ரவியை நடுரோட்டில் அடித்து துவம்சம் செய்யும் இடத்தில் அரங்க முழுக்க ஆரவாரம். கிளைமாக்ஸ் காட்சியிலும் ரவுடியுடன் அதே அதிரடி. அதே தடாலடி. காதலி அனு கீர்த்திவாசை வம்பிழுக்கும் காட்கிகள் கலகலப்பு.
பாகுபலி படத்தில் காளகேயனாக வந்து கலக்கிய பிரபாகர், இந்த படத்தில் கமர்ஷியல் வில்லனாக மிரட்டுகிறார்.
நாயகியாக வரும் அன கீர்த்தி வாஸ் காதல் காட்சிகளில் கிளுகிளுப்பு ஊட்டுகிறார்.

காமெடிக்கு சிங்கம்புலி, தீபா, புகழ் இருந்தும் சிரிப்பு மிஸ்சிங்.

இளவரசு, ஆதிரா, கு.ஞானசம்பந்தம் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் விமலும் இருக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணாவின் கேமரா சண்டைக்காட்சிகளை பிரமாண்டமாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் கண்களில் நிறுத்துகிறது.

இமானின் இசையில் பின்னணி இசை ஓ.கே. நல்ல பாட்டு தரும் இமான் எங்கே போனார்?

அதரப் பழசான கதை தான் என்றாலும், அதிரடி புண்ணியத்தில் தப்பி கரை சேர்கிறார், டிஎஸ்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *