தஞ்சை மாவட்டம் காளையார்கோவில் கிராமத்தில், கபடி விளையாட்டிலும் அதைப் பயிற்றுவிப்பதிலும் ஜாம்பவானாக திகழ்கிறார் பெரியவர் ‘பொத்தாரி’ ராஜ்கிரண். அவருக்கும் அவரின் கூட்டுக் குடும்பத்திற்கும் ஏற்படும் ஒரு அவப்பெயரால், அக்குடும்பத்தில் ஒரு விபரீத மரணம் நிகழ்ந்து விடுகிறது. பொத்தாரியின் பேரன் ‘சின்னதுரை’ அதர்வா, அந்த மரணத்திற்கு பின்னால் உள்ள சதியை வெளியே கொண்டு வந்து குடும்பத்துக்கு நேர்ந்த அவப்பெயரை துடைத்தான் என்பது கதை. இதை கூட்டுக்குடும்ப பாசத்தோடு கபடி ஆடடத்தையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
தாத்தாவை தப்பாக பேசும் நபர்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சியுடன் அறிமுகமாகிறார், ‘சின்னதுரை’ அதர்வா. தாத்தாவின் முதல் தார குடும்பம் தன்னை எவ்வளவு தான் அசிங்கப்படுத்தி அனுப்பினாலும் அதையெல்லாம் சட்டையே செய்யாமல் அங்கே போய் நிற்கும் இடங்களில் ‘பாசம் விஷயத்தில் தன்மானமாவது, அவமானமாவது’ என்கிற சின்னதுரையை ரசிக்க முடிகிறது.
காதலுக்காகவும், கபடிக்காகவும் வரும் நாயகி ஆஷிகா ரங்கநாத்துக்கு அதிக வேலையில்லை என்றாலும், அதர்வாவை கபடி கிரவுண்டில் தாலி கட்டச் சொல்கிற இடத்தில் நடிப்பும் வருகிறது.
பழைய கபடி வீரர் பொத்தாரியாக ராஜ்கிரண். தன் பேரன்களுக்கு கபடியை கற்றுத்தரும் கண்டிப்பான தாத்தாவாக தனது அனுபவ நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் ஆட்டத்தில் தன்னிடம் கபடி கற்றவனால் அவமானப்படும் இடத்தில் அந்த இக்கட்டு நிலையை உடல் மொழியில் பிரதிபலிப்பது தனி அழகு.
தாத்தாவின் வாரிசுகளில் முறைத்துக் கொண்டிருக்கும் ஜெயப்பிரகாசும், துரை சுதாகரும், நண்பனின் சூழ்ச்சிக்கு பலியாகும் பேரன் செல்லையா ராஜ் அய்யப்பாவும் தனிரகம். அதர்வாவின் பெற்றோராக ஆர்.கே.சுரேஷ்-ராதிகா, ராஜ்கிரண் குடும்பத்துக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லனாக ரவிகாலே சிறப்பு.
சிங்கம் புலி, பாலசரவணன் காமெடிக்கு. என்றாலும் கபடி விளையாட்டில் காலில் அடிபட்டு கதறும் இடத்தில் குணசித்ரத்திலும் எட்டிப் பார்க்கிறார், சிங்கம் புலி.
ஜிப்ரானின் இசையில் இரண்டு பாடல்கள் ரசனை. எழுதி இயக்கிய சற்குணம், களவாணி படத்துக்குப் பிறகு மறுபடியும் கிராமத்து கதைக்குள்ளிருந்து முழுமையாக வெளிப்பட்டிருக்கிறார். பிற்பகுதியில் அடிக்கடி வரும் கபடி போட்டிகள் கபடி களத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

பட்டத்து அரசன், சென்டிமென்ட் ராஜா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/11/63bd6daea3447d4678debd8b1a2989ce.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/11/63bd6daea3447d4678debd8b1a2989ce-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தஞ்சை மாவட்டம் காளையார்கோவில் கிராமத்தில், கபடி விளையாட்டிலும் அதைப் பயிற்றுவிப்பதிலும் ஜாம்பவானாக திகழ்கிறார் பெரியவர் ‘பொத்தாரி' ராஜ்கிரண். அவருக்கும் அவரின் கூட்டுக் குடும்பத்திற்கும் ஏற்படும் ஒரு அவப்பெயரால், அக்குடும்பத்தில் ஒரு விபரீத மரணம் நிகழ்ந்து விடுகிறது. பொத்தாரியின் பேரன் ‘சின்னதுரை’ அதர்வா, அந்த மரணத்திற்கு பின்னால் உள்ள சதியை வெளியே கொண்டு வந்து குடும்பத்துக்கு நேர்ந்த அவப்பெயரை துடைத்தான் என்பது கதை. இதை கூட்டுக்குடும்ப பாசத்தோடு கபடி ஆடடத்தையும்...