சினி நிகழ்வுகள்

பிரஷாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படத்தை உலகமெங்கும் கலைப்புலி தாணு வெளியிடுகிறார்

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘டோர்ரா புஜ்ஜி’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க இருக்கிறார், பிரபுதேவா. பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமானதும் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S. தாணு உலகமெங்கும் வெளியிடுகிறார்.