‘பாசமலர், கிழக்குசீமையிலே’ பட வரிசையில் இன்னொரு அண்ணன்-தங்கை பாசக்கதை பாசமலர், கிழக்கு சீமையிலே படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக காட்டும் படம் “மஞ்சக்குருவி”
அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூடப் பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார்.
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடிக்க, விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன் சின்னதம்பி, இசை சௌந்தர்யன், ஒளிப்பதிவு ஆர்.வேல், எடிட்டிங் ராஜா முகமது, சண்டை மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு விமலா ராஜநாயகம்.
சூப்பர் ஹிட் பாடல்களுடன் அண்ணன்-தங்கையின் இந்த பாசக்கதையை விரைவில் திரையில் காணலாம்.