சினி நிகழ்வுகள்

சிறந்த இயக்குநர் சமுத்திரக்கனி… சிறந்த நடிகர் வசந்த் ரவி! Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ விருது


Earth & Air மற்றும் The Idea Factory அமைப்புகள் ‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொழுதுபோக்குப் பிரிவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘என் சென்னை யங் சென்னை’ விருதுகளுக்காக 13 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இவை பல்வேறு விருதுக் குழுவினரால் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படாத படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் ‘என் சென்னை யங் சென்னை’ விருது வழங்கும் விழா நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ட்ரீம் தமிழ்நாடு நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழ்த் திரையுலகுக்கு 13 பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகள் விபரம்:

சிறந்த படம்: வினோதய சித்தம்

சிறந்த இயக்குநர்: சமுத்திரக்கனி (வினோதய சித்தம்)

சிறந்த நடிகர்: வசந்த் ரவி (ராக்கி)

சிறந்த நடிகை: அபர்ணதி (தேன், ஜெயில் படங்கள்)

சிறந்த நடிகர்(விமர்சன ரீதியில்): தருண்குமார் (தேன் படத்துக்காக)

சிறந்த எதிர் நாயகன்: மைம் கோபி (மதில்)

சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (ஜெயில்)

சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா (வினோதய சித்தம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: சுகுமார் (தேன்)

சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஃபிராங்கிளின் ஜேக்கப் (ரைட்டர்)

ஆச்சி மனோரமா விருது: கோவை சரளா

சார்லி சாப்ளின் விருது: வடிவேலு

பீம்சிங் விருது: இயக்குனர் பாரதிராஜா

விழாவினை எர்த் & ஏர் , @த ஐடியா ஃபேக்டரிஸ் நிறுவனர்களான கார்த்தி மற்றும் சங்கர் மிகப்பிரம்மாண்டமாக
ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *