படைப்பாளன் பட விமர்சனம்

திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்களின் போராட்ட வாழ்க்கையை சொல்லும் படம்.
உதவி இயக்குநர் ஒருவர் தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவரது கதையை நிராகரிப்பது போல் நடித்து புகழ்பெற்ற இயக்குநரிடம் அந்த கதையை கொடுத்து பெரும்பொருட்செலவில் படமாக எடுக்க முயல… தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நியாயம் கேட்கப்போன அவருக்கு என்னவாகிறது? என்பதை மனம் பதைக்கச் சொல்லியிருக்கிறது, கிளைமாக்ஸ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் தியான்பிரபு, தனது நடிப்பால் உதவி இயக்குநர் கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார். வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். தயாரிப்பாளரிடம்கதை சொல்லும்போது அவரத உடல்மொழி வரை பிரமாதம்.
நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர். பேயைப் பார்த்துப் பயப்படும் இடங்களில் இந்த அழகுப் பெண்கள் நடிக்கவும் செய்கிறார்கள்.
காக்காமுட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள். வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் கச்சித நடிப்பில் மனதுக்குள் கலவரம் கூட்டுகிறார்கள். படத் தயாரிப்பாளராக மனோபாலா அம்சம்.
வேல்முருகன் ஒளிப்பதிவில் வில்லனை அழிக்கும் காட்சி பேசப்படும்.
பாலமுரளியின் பின்னணி இசையில் ‘ஆவி’ பறக்கிறது
எதிர்பாராத அந்த கிளைமாக்சில் டைரக்டர் தியான் பிரபு ‘உள்ளேன் அய்யா’ என்கிறார். இதுவரை திருடப்பட்ட படங்களின் கதைகளை பட்டியலிட்ட விதத்திலும் ‘தில்’லானவர் தான் இந்த இயக்குனர்.
