Latest:
சினிமா செய்திகள்திரை விமர்சனம்

பன்னிக்குட்டி பட விமர்சனம்

நாயகன்கள் கருணாகரன், யோகிபாபு இருவரின் எதிர்காலத்துக்கும் ஒரு பன்னிக்குட்டி தீர்வாக இருக்கிறது. பன்னிக்குட்டியை பத்திரமாக வைத்திருந்தால் தான் யோகிபாபுவுக்கு வாழ்வு. கருணாகரனுக்கு பன்னிக்குட்டி மீது பைக்கை ஏற்றினால் தான் எதிர்காலம். இந்த பன்னிக்குட்டி ஆட்டத்தில் வென்றது யார்? என்பதே படத்தின் கதை.அதிகாலை அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எழுந்து… குளித்து புது ட்ரெஸ் போட்டுக்கிட்டு, ராத்திரி மீந்த சாதத்தை ஒரு பிடி பிடிச்சிட்டு ஆபீசுக்கு கிளம்பற மாதிரி தற்கொலை பண்ணிக்க கிளம்புகிறார் கருணாகரன். அதற்கு வீட்டு ஆட்கள் காட்டும் ரியாக்ஷனைப் பார்க்கிறப்பவே அவர் இப்படி கிளம்புவது முதல்முறை இல்லை என்பதை படத்தின் தொடக்கத்திலேயே தெரிந்து விடுகிறது. இந்த கேரக்டரில் தனது இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார், கருணாகரன். லட்சுமிபிரியாவுடனான காதல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். நண்பர்களாக ராமர், தங்கதுரை, அப்பாவாக டி.பி.கஜேந்திரன், தங்கையாக ஷாதிகா, சாமியாராக லியோனி கதை மாந்தர்களாக உலா வருகிறார்கள்.
கிட்டத்தட்ட இடைவேளை சமயத்தில் தான் வருகிறார் யோகிபாபு. பன்றிக்குட்டியை கருணாகரனிடம் இருந்து பாதுகாப்பதற்கு அவர் படும்பாடு சிரிப்பை வரவழைத்து விடுகிறது. கருணாகரனின் காதலியாக வரும் லட்சுமி பிரியா அழகாக இருக்கிறார். அழகாகவும் நடிக்கிறார். இனி அம்மணி பிசியாகி விடுவார்.
கிருஷ்ணகுமாரின் இசையும் சதீஷ்முருகன் ஒளிப்பதிவும் இயக்கிய அனுசரணுக்கு பக்க பலமாகி இருக்கிறது. ‘கிருமி’ என்ற அழுத்தமான படம் தந்த இவர், பன்னிக்குட்டியை மையமாக வைத்து இந்த படத்தில் ஆடியிருப்பது ‘காமெடி கபடி.’