செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் கொலைகள் செய்த பட்டாம் பூச்சி என்ற சைக்கோ கொலையாளி நானே என்கிறார். அவர் எதற்காக தொடர் கொலைகள் செய்தார் என்பதை கண்டறிய அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி.யிடம் ஒப்படைக்கிறது காவல்துறை.

விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி.யிடம் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய். அவர் தான் சைக்கோ கொலையாளி என்பது தெரிந்தும் சட்ட ரீதியாக அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சுந்தர்.சி, விடுதலையான ஜெய்யின் தொடர் கொலைகளை தடுத்தாரா? இல்லையா? என்பது அடுத்தடுத்த அதிரடி காட்சிகள்.
சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்துகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஜெய், நடிப்பில் வில்லத்தனத்தை காட்ட பெரிதும் முயற்சித்திருக்கிறார்.
நாயகி ஹனிரோஸ்க்கு செய்தியாளர் வேடம். பாந்தமாக பொருந்துகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் நடிப்பிலும் ‘அக் மார்க்’ தெரிகிறது.
இமான் அண்ணாச்சியின் கதாப்பாத்திரமும், அந்த கதாப்பாத்திரம் கொலை செய்யப்படும் காட்சியும் பரிதாபத்தின் உச்சம். அண்ணாச்சி குணசித்ர நடிப்பிலும் சிறப்பு.
நவநீத் சுந்தரின் இசையும், கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவும் கதையோடு ஒன்ற வைக்கிற வித்தையை செய்து விடுகிறது.
சைக்கோ த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பத்ரி, இதை 1990 பீரியடில் நடப்பதாக சொல்லியிருப்பதிலும், ஜெய்-சுந்தர்.சி. இடையிலான மோதலை அதிரடியாக சொன்ன விதத்திலும் மசாலா மன்னனாக தன்னை நிரூபித்திருக்கிறார்.

பரபரப்பான பயணம், இந்த பட்டாம்பூச்சி.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/maxresdefault-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/maxresdefault-e1656413309884-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் கொலைகள் செய்த பட்டாம் பூச்சி என்ற சைக்கோ கொலையாளி நானே என்கிறார். அவர் எதற்காக தொடர் கொலைகள் செய்தார் என்பதை கண்டறிய அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி.யிடம் ஒப்படைக்கிறது காவல்துறை. விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி.யிடம் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய். அவர் தான் சைக்கோ...