சினிமா செய்திகள்

கவிதை போன்ற கதையோடு உருவாகியிருக்கும் நகராதே பாடல்.

இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள் கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ..நிச்சயமாக அவன் மகத்தானவனே

தமிழில் இறைவனைப் பாடும் தேவாரப்பாடல்கள் தொடங்கி, திரையில் நடிகர்கள் பாடும் பாடல்கள் வரை எத்தனையோ வந்திருக்கின்றன. ஒருகாலத்தில் ஒரு திரைப்படத்தில் 20 க்கும் மேற்பட்ட பாடல்கள் எல்லாம் கூட இடம்பெற்றன. தற்போது ஒன்றிரண்டு பாடல்கள் வரை சுருங்கிவிட்டது. திரைப்படத்தில் பாடல்கள் சுருங்கி விட்டாலும் தனியிசை ஆல்பங்கள் தற்போது கணிசமாக வரத்துவங்கிவிட்டன. அதில் நல்ல பாடல்கள் மட்டும் சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றன. அப்படியொரு வரவேற்பை பெறவே தற்போது வட்டல் ஸ்டியோஸ் தயாரிப்பில் தனியிசைப் பாடல் ஒன்று வெளியாகியிருக்கிறது

நகராதே என்ற வரியில் துவங்கும் இப்பாடலை அஷ்வின் ராஜ் தன் நல்ல இசையால் உருவாக்க, கு.கார்த்திக் எழுதியுள்ளார். தங்கள் வசீகர குராலால் நிவாஸ் கே ப்ரசன்னாவும் ஸ்வாகதா எஸ் கிருஷ்ணனும் பாடியுள்ளனர். இசையும் வரிகளும் குரலும் மட்டுமா தனியிசைப்பாடல்? அந்தப்பாடலை கண்கொண்டு கண்டு இன்புற வேண்டாமா? So இப்பாடலை மிக அழகான விஷுவலில் இயக்கியிருக்கிறார் நாஷ். இந்தப்பாடல் காட்சியில் நாயகனாக VJ மாதேவன், நாயகியாக பாடலைப்பாடியுள்ள ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன் நடித்துள்ளனர். ஷாரஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த நகராதே பாடல் 2K கிட்ஸ் மட்டுமின்றி எல்லோர் மனதை விட்டும் நகராது என்கிற அளவில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது

மேலும் இப்பாடல் வெறும் காட்சிப்பாடலாக மட்டுமில்லாமல் கதைப்பாடலாகவும் இருக்கிறது. இந்தப்பாடலுக்குள் கவிதை போன்ற அழகான கதையொன்றுள்ளது. 24-ஆம் தேதி வெளியான இப்பாடல் இணையமெங்கும் பாசிட்டிவ் எனர்ஜியோடு வலம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *