சினி நிகழ்வுகள்

‘‘இந்த படம் மூலம் உலகமே விஜய்சேதுபதியை விரும்பி பார்க்கும்…’’ மாமனிதன் படவிழாவில் இயக்குனர் சீனு.ராமசாமி பெருமிதம்

சீனு.ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் முதல் முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் வரும் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நீங்க நடித்தால் நானும் அப்பாவும் மியூசிக் பண்றோம் என யுவன் சங்கர்ராஜா ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம் தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு.ராமசாமி. அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருந்தது. அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரத்துடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்கக் கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவரின் அர்ப்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்று நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க முன்வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். ” என்றார்.
இயக்குநர் சீனு.ராமசாமி பேசுகையில், “இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, இளையராஜா வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துக் கொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது” என்றார்.
நடிகை காயத்ரி பேசுகையில், “இந்த படம் ஒரு காதல் கதை. படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம்” என்றார்.

’மாமனிதன்’ படத்தை தனது ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வெளியிடும் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு.ராமசாமி. எல்லோருடைய வாழ்க்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும். தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடையும். இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.‘‘இந்த படம் மூலம் உலகமே விஜய்சேதுபதியை விரும்பி பார்க்கும்…’’
மாமனிதன் படவிழாவில் இயக்குனர் சீனு.ராமசாமி பெருமிதம்

சீனு.ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் முதல் முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படம் வரும் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நீங்க நடித்தால் நானும் அப்பாவும் மியூசிக் பண்றோம் என யுவன் சங்கர்ராஜா ஒரு நாள் சொன்னார். அப்படி துவங்கிய படம் தான் மாமனிதன். மிகப்பெரிய விஷயத்தை எளிமையா சொல்லக் கூடிய இயக்குநர் சீனு.ராமசாமி. அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். நான் நடிகனாக ஆசைப்பட்ட காலத்தில் குருசோமசுந்தரம் போல் நடிக்க வேண்டும் என ஏக்கம் இருந்தது. அப்படிபட்ட நடிகர் குரு சோமசுந்தரத்துடன் நடித்தது மகிழ்ச்சி. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் காரணம். மூன்று இடங்களில் நடக்கக் கூடிய கதையை இவ்வளவு சீக்கிரம் எடுத்து முடிக்க இருவரின் அர்ப்பணிப்பு தான் காரணம். பலர் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தை காயத்ரி ஏற்று நடித்துள்ளார். அவருடைய திறமைகள் இன்னும் வெளிக்கொண்டு வரப்படவில்லை. இந்த படம் நம்முடைய கதையை கூறுவது போல் இருக்கும். யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து என் படத்திற்கு இசையமைக்க முன்வந்தபோது, சீனுராமசாமி தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும். ” என்றார்.
இயக்குநர் சீனு.ராமசாமி பேசுகையில், “இந்த திரைப்படம் மூலமாக உலகமே விஜய் சேதுபதியை திரும்பிபார்க்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். இந்த கதை பலரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் விஜய் சேதுபதி என்னை அழைத்தார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க முடிவெடுத்த போது, இளையராஜா வாழ்ந்த இடத்தில் படமாக்க விரும்பினேன். அவர் வாழ்ந்த தேனி பண்ணைபுரத்தில் இந்த படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டது.

நான் பல நடிகைகளுக்கு கதை சொன்னேன். பலருக்கு இரண்டாம் பாதியில் விருப்பம் இல்லை. அப்போது காயத்ரி இந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி நடித்துக் கொடுத்தார். இந்த படத்திற்கு கண்டிப்பாக காயத்ரிக்கு தேசியவிருது கிடைக்கும். இந்த படத்தை ஜீவா மற்றும் இளையராஜாவிற்கு அர்ப்பணித்து இருக்கிறேன். நம்மை சுற்றியுள்ள மாமனிதர்களை அடையாளப்படுத்தும் படம் தான் இது” என்றார்.
நடிகை காயத்ரி பேசுகையில், “இந்த படம் ஒரு காதல் கதை. படத்தில் 40 வருட வாழ்க்கை கதை இருக்கிறது. அதற்கான உழைப்பை கொடுத்துள்ளோம்” என்றார்.

’மாமனிதன்’ படத்தை தனது ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் வெளியிடும் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு.ராமசாமி. எல்லோருடைய வாழ்க்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த கதை மூன்று இடங்களில் நடக்கும். தேனியில் ஆரம்பித்து, கேரளா சென்று, காசியில் முடிவடையும். இந்த படம் எனக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும். காயத்ரிக்கு இந்த படம் முக்கியமானதாக இருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *