சினிமா செய்திகள்திரை விமர்சனம்

சுழல் -இணைய தொடர் விமர்சனம்

கோவைக்கு அருகிலுள்ள சாம்பலூர் கிராமத்தில் இயங்கி வரும் சிமென்ட் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத் தலைவராக இருப்பவர் பார்த்திபன். அவர் தலைமையில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் நடந்த மறுநாள் தொழிற்சாலைக்கு தீ வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பார்த்திபனின் மகள் காணாமல் போகிறார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக அந்த ஊரின் காவல் ஆய்வாளர் ஸ்ரேயா ரெட்டியும் உதவி காவல் ஆய்வாளர் கதிரும் விசாரணையை தொடங்குகிறார்கள். இந்த விசாரணை சில திருப்பங்கள், பல குழப்பங்கள் என நீண்டு கொண்டே போக, இறுதியில் இதற்கெல்லாம் யார் காரணம்? எப்படி நடந்தது? ஏன் நடந்தது? என பல கேள்விகளுக்கு அதிர்ச்சி விடை தருகிறது, இந்த இணையத் தொடர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த இணையத் தொடர் 8 எபிசோட்களை கொண்டது. ‘விக்ரம்- வேதா’ புகழ் புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் திரைக்கதை எழுத, பிரம்மா-அனுசரண் இயக்கியிருக்கிறார்கள்.
இரண்டு மகள்களுக்கு தந்தையாக வரும் பார்த்திபன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது வழக்கமான நடிப்பையும், வசனத்தையும் தவிர்த்து விட்டு புதிய பாணியை மேற்கொண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஸ்ரேயா ரெட்டி, அதிரடி ஸ்டைல் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். தாயாக மனைவியாக இவரது இன்னொரு பரிமாணத்திலும் கவனம் ஈர்க்கிறார்.

உதவி ஆய்வாளராக கதிர். பொறுப்பான பாத்திரத்தில் சிறப்பான நடிப்பு. முழு கதையையும் தன் தோள் மீது அவர் சுமந்திருக்கிறார்.
பார்த்திபனின் மூத்த மகள் நந்தினி கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. கோபிகா ரமேஷ், ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சந்தான பாரதி பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கதிர் முழு கதையையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். தொடர் முழுவதும் வரும் அவரது கதாப்பாத்திரமும் அதற்கு ஏற்ப அவர் நடித்திருப்பதும் தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதிகரித்திருக்கிறது.
முகேஷ்வரனின் கேமரா மலைப்பகுதியின் அழகையும், மயானகொள்ளை திருவிழா காட்சிகளையும் படமாக்கிய விதம் ஆசம். காட்சிகளை மிக கச்சிதமாக தொகுத்திருக்கிறார், படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.
சந்தன் குமாரின் கதைக்கு இயக்குநர்கள் பிரம்மா.ஜி மற்றும் அனுசரண் அமைத்த திரைக்கதை எதிர்பார்ப்பு கலந்த சுவாரஸ்யம். ஊகிக்க முடியாத திரைக்கதை தொடரோடு ஒன்றச்செய்து விடுகிறது.
மொத்தத்தில், ‘சுழல்’ சுவாரஸ்யம் பிளஸ் சஸ்பென்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *