யூ டியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து இதோ அம்முச்சி-2. அதே கொங்கு மண்டல குழு இரண்டாம் பாகத்திலும் வெற்றியை தக்க வைத்திருக்கிறார்கள்.
கோடாங்கி பாளையம் கிராமத்தில் பிரசன்னா பாலச்சந்திரன் பிரபலம். அதை விட மகன் சசியால் அவர்அடிக்கடி பஞ்சாயத்துக்கு வருவது இன்னும் பிரபலம். இதுபோதென்று அவரது உறவுக்கார இளைஞன் அருண், நேரம் கெட்ட நேரத்தில் அவர் ஊரிலிருக்கும் தனது காதலிக்கு போன் மேல் போன் போட்டு பேச முயன்றதில் கல்லூரியில் சேரவேண்டிய காதலியின் படிப்பு ‘கட்’.
இந்நிலையில் தனது காதலையும், காதலியின் கல்வியையும் பாதுகாப்பதற்காக கோடாங்கி பாளையத்தில் உள்ள் மாமா வீட்டில் தங்கி அருண் அடிக்கும் அந்தர்பல்டி தான் மீதிக்கதை.
சினிமாவுக்கான ஹீரோவும், ஹீரோயினும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நியதியையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, நிஜமான ஒரு கிராமத்து மனிதர்களை திரைக்கு கொண்டு வந்ததிலேயே படம் சிகரம் ஏறி விடுகிறது.
நாயகனாக அருண். கூச்சம் நாச்சம் இல்லாத அவர் கேரக்டர் தமிழுக்குப் புதுசு. காதலனின் அவசரத்தால் தனது கல்லூரிக்கனவு கட்டானதில் கோபம் கொள்ளும் அந்த காதலி மித்ரா கூட இயல்பான கிராமத்துப் பெண்ணாக வசீகரிக்கிறார். ஆரம்பத்தில் பெற்றோருக்கு அடங்கியிருப்பவர், ஒருகட்டத்தில் அதே பெற்றோரை புறங்கையால் ஒதுக்கி வி்ட்டு அவர் காட்டும் வீராவேசம் அம்மணியை நடிப்புக் கண்மணியாக்கி இருக்கிறது. நாயகனின் சகாவாக வரும் சசி, நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி , சிரித்த முக பாட்டி அம்முச்சியாக சின்னமணி, மாகாளியாக சந்திரகுமார், வில்லன் மசநாய் மணியாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் எல்லோருமே கிராமத்து மாந்தர்களாகவே வாழ்ந்து பிரமிக்க வைக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் அவ்வப்போது ஓரம் கட்டி நடிப்பால் ஆச்சரியப்படுத்தும் பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கு கிடைத்த புதிய பொக்–கிஷம். ஒட்டுமொத்த குடும்பத்தின் பாத்திர பண்ட தாக்குதலையும் அவர் எதிர்கொள்ளும் இடம் வெடிச்சிரிப்பு.

பஞ்சாயத்து காட்சிகள் அத்தனை அழகு. ஒரு பிரச்சினை சீரியசாய் போய்க் கொண்டிருக்க, யாரோ ஒருவர் பஞ்சாயத்துக்கு சம்பந்தமில்லாத இன்னொரு பிரச்சினை பற்றி பேச, அதுவே முக்கிய பிரச்சினை லெவலுக்கு நீள… அள்ளிக்கொண்டு போகிறது சிரிப்பு.

சந்தோஷ் குமாரின் கேமராவும், விவேக் சரோவின் இசையும் கதையோடு இணைந்த தனித்துவ அழகு.

கிளைமாக்சில் பெண்கல்வியை முன்னிலைப்படுத்தும் இடம் அம்முச்சியை உச்சிமுகர்ந்து கொண்டாட வைக்கிறது. கிளைமாக்ஸ் போட்டி தொடங்கும்போதே இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி லேசுப்பட்ட ஆளில்லை என்பதை திரை வழியே நமக்கு சொல்லி விடுகிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/MV5BNTAxYjBiOTQtZmJjZS00MTg5LWIzNDgtODZlNzE2MTY5MjBlXkEyXkFqcGdeQXVyMTUyNzk0MzIw._V1_-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/06/MV5BNTAxYjBiOTQtZmJjZS00MTg5LWIzNDgtODZlNzE2MTY5MjBlXkEyXkFqcGdeQXVyMTUyNzk0MzIw._V1_-scaled-e1655554187507-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்யூ டியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து இதோ அம்முச்சி-2. அதே கொங்கு மண்டல குழு இரண்டாம் பாகத்திலும் வெற்றியை தக்க வைத்திருக்கிறார்கள். கோடாங்கி பாளையம் கிராமத்தில் பிரசன்னா பாலச்சந்திரன் பிரபலம். அதை விட மகன் சசியால் அவர்அடிக்கடி பஞ்சாயத்துக்கு வருவது இன்னும் பிரபலம். இதுபோதென்று அவரது உறவுக்கார இளைஞன் அருண், நேரம் கெட்ட நேரத்தில் அவர் ஊரிலிருக்கும் தனது காதலிக்கு போன் மேல் போன்...