முன்னணி நடிகைகள் பங்கேற்கும் ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். ‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். இ்ந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஞாயிறு நடைபெறுகிறது. விழாவில் முன்னணி நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் உள்ளிட்ட இந்திய நடிகைகள் பங்கேற்ற சிறப்பிக்கிறார்கள்.
‘தி லெஜண்ட்’ படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார்கள் ஜேடி-ஜெர்ரி. இளமை ததும்பும் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளார். இபடத்தின் முதல் பாடல் ‘மொசலோ மொசலு’-வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பாராட்டுகளை பாடல் கடந்து மாநகரம் முதல் கிராமம் வரை ஹிட் அடித்துள்ளது. பா விஜய் பாடல் வரிகளை இயற்ற, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.
ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள ‘மொசலோ மொசலு’ பாடலில் பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோருடன் தோன்றும் லெஜண்ட் சரவணன், தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான பென்னி தயாள் மற்றும் ஜொனிதா காந்தி பாடி கவிஞர் சினேகன் எழுதிய ‘வாடி வாசல்’ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் ஒரு கோடி பார்வைகளை கடந்து வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு மகுடம் சூட்டும் வகையில், ‘தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஞாயிறு (மே 29) அன்று நடைபெறவுள்ளது.
இந்த படத்தில் தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா ‘தி லெஜன்ட்’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது, தி லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘தி லெஜண்ட்’.
ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்ட்டிருக்கிறது, படம்.
சென்னையில் பிரமாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.
ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இது. இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகிபாபு முக்கிய வேடத்தில் வருகிறார்.
விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெராடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், மாஸ்டர் அஸ்வந்த் படத்தின் முக்க்ய நட்சத்திரங்கள்.
தி லெஜண்ட் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஆர்.வேல்ராஜ் மேற்கொள்ள, ரூபன் எடிட் செய்கிறார், கலை அமைப்பு பணிகளை எஸ் எஸ் மூர்த்தி கவனிக்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார், சண்டைப் பயிற்சியை அனல் அரசு கையாள்கிறார். ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் ஆகியோர் நடன பணிகளை மேற்கொள்கிறார்கள், வைரமுத்து, கபிலன், பா விஜய், சினேகன், கார்க்கி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர்
ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ள விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதால் பார்வையாளர்களுக்கு ஞாயிறு மாலைப்பொழுது முழுக்க கொண்டாட்டம் தான்.
