கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க, பா.ரஞ்சித் எழுதி இயக்கும்
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது.

கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் லாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம் பிடித்துக் காட்டும் ஒரு நிறுவனம் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம்.

பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பயணம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை’ என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.
அடுத்து இந்த நிறுவன தயாரிப்பில் ‘சேத்துமான், ஜெ.பேபி, பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது’ என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ் சினிமாவைத்தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க நீலம்_ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது.
நீலம் ஸ்டுடியோ வோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் Golden Ratio Films இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ எனும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் இயக்கப்படுகிறது. இதனை பா.ரஞ்சித் எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. இதில் பா.ரஞ்சித் கலந்துகொள்கிறார்

இந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடரை இயக்குநர் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/01fe8e37-71fa-437c-8dae-0e550e9f40c9.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/01fe8e37-71fa-437c-8dae-0e550e9f40c9-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்க, பா.ரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது. கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் லாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம் பிடித்துக் காட்டும் ஒரு நிறுவனம் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம். பரியேறும்பெருமாள் படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பயணம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், குதிரைவால்,...