அப்பாவின் டார்ச்சரால் என்ஜினியரிங் படிப்பில் சேரும் ‘சுமார் படிப்பு’ மாணவர் சிவகார்த்திகேயன், அந்த படிப்பில் தேறினாரா? கல்லூரியில் டிசிப்ளின் ஆசிரியர் எஸ்.ஜே.சூர்யா தந்த குடைச்சலை எப்படி எதிர்கொண்டு மீண்டார்? பள்ளிப் பருவத்தில் தவற விட்ட காதலையும் காதலியையும் கல்லூரிக் காலத்தில் எப்படி மீட்டெடுக்கிறார்? கலகல பின்னணியில் அமைந்த திரைக்களம் இந்த ‘டானை’ ஸ்பெஷலாக்கி விடுகிறது.
கிராமத்து சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. பிறந்ததோ ஆண் குழந்தை. அதுமுதல் மகனை ஒரு வித வெறுப்பு மனநிலையிலேயே வளர்க்கிறார். இதற்கிடையே படிப்பிலும் அந்த மகன் சுமாருக்கும் கீழ் என்பது தந்தைக்கு தெரிய வர…இதற்குப்பிறகு சிவகார்த்திகேகயன் என்னவாகிறார் என்பது சுவாரசிய திரைக்கதை. தந்தை ஏன் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டார் என்ற காரணம் மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சி.

சிவகார்த்திகேயன் கல்லூரி டான் சக்ரவர்த்தியாக நடிப்பில் அதகளப்படுத்துகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது எனர்ஜி திரையை தாண்டி ரசிகனையும் தொற்றிக் கொள்கிறது. குறிப்பாக பிளஸ்-2 பருவ காதலை டெவலப் செய்யும் நடிப்பில் அத்தனை ரசனை. கல்லூரி பேராசிரியர் எஸ்.ஜே.சூர்யாவை தனது சாமர்த்தியத்தால் எதிர்கொள்ளும் இடங்களும் ஆஹா ரகம். அப்பாவுக்கு பயந்த மகனாக இன்னொரு நடிப்பு முகம் ஆசம்.
நாயகியாக பிரியங்கா அருள்மோகன். நடிக்க வாய்ப்புள்ள எல்லா இடங்களிலுமே ஸ்கோர் அள்ளி விடுகிறார். காதல் சின்னம் இடம் பெற்ற அட்டையை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கப் போகும் இடத்தில் சிவகார்த்திகேயன் அப்பாவிடம் மாட்டிக்கொள்ளும் இடத்தில், என்னமா நடிக்குது பொண்ணு. டிசிப்ளின் ஆசிரியராக வரும் எஸ்.ஜே.சூர்யா தனக்கு ‘கட்டம் கட்டுவது’ சிவகார்த்திகேயன் தான் என்பதை தெரிந்து கொண்ட பிறகு நடிப்பில் நடை வரை பறக்கிறது தீப்பொறி. கண்டிப்பான தந்தையாக சமுத்திரக்கனி அந்த பிடிவாத அப்பா கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அம்மாவாக ஆதிரா பாண்டிலட்சுமி கிளைமாக்சில் ‘நடிப்பு லட்சுமி’யாக உருமாறுகிறார்.
கல்லூரி சேர்மனாக ராதாரவி சிறப்பு. சிரிப்பு ஏரியாவை சூரி, மனோபாலா, சிங்கம்புலி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ஜார்ஜ் மரியன், செல்லா, ஆர்ஜே விஜய், பிக் பாஸ் ராஜூ, பால சரவணன், ஷிவாங்கி, ஷாரிக் ஹாசன் என ஆளாளுக்கு பிரித்துக் கொள்கிறார்கள்.
‘ஜலபுல ஜங்கு’ பாடலில் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார், அனிருத். கே.எம். பாஸ்கரன் கேமரா சிவகார்த்திகேயனின் அந்த மழை இரவு கார் பயணத்தில் தொடங்கி முடிவு வரை கண்களோடு இணைந்து போகிறது. எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி. ஒரு மாஸ் ஹீரோவுக்கான சகல விஷயங்களையும் ரசனைப் பின்னணியில் காட்சிப்படுத்தி தமிழ்த்திரையின் எதிர்பார்ப்புக்குரிய நல்வரவாகி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெகிழ்வுக்கு பூங்கொத்து.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தேர்வு வைத்து அவர்களை தேர்வு செய்வதெல்லாம் ரொம்பவே டூ மச். அதையும் தாண்டி படம் மனதோடு ரொம்பவே டச்.
டான், ஜெயிச்சிட்டான்யா.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/aef819ea-87f4-4b94-82a4-dae8b1610c8b-774x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/aef819ea-87f4-4b94-82a4-dae8b1610c8b-e1652451566939-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்அப்பாவின் டார்ச்சரால் என்ஜினியரிங் படிப்பில் சேரும் ‘சுமார் படிப்பு’ மாணவர் சிவகார்த்திகேயன், அந்த படிப்பில் தேறினாரா? கல்லூரியில் டிசிப்ளின் ஆசிரியர் எஸ்.ஜே.சூர்யா தந்த குடைச்சலை எப்படி எதிர்கொண்டு மீண்டார்? பள்ளிப் பருவத்தில் தவற விட்ட காதலையும் காதலியையும் கல்லூரிக் காலத்தில் எப்படி மீட்டெடுக்கிறார்? கலகல பின்னணியில் அமைந்த திரைக்களம் இந்த ‘டானை’ ஸ்பெஷலாக்கி விடுகிறது. கிராமத்து சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. பிறந்ததோ ஆண் குழந்தை....